பக்கம் எண் :

வாய்ச்செய்கை யொலிச்சொற்கள் 25

    2. முயங்குதல்

     "கவவிநாம் விடுத்தக்கால்" (கலித். 35)

     "கவவொடு மயங்கிய காலை யான" (தொல். பொருள். 173)

     இரு கையாலும் தழுவுதல் ஈரலகாற் கவ்வுதல் போலிருத்தல் காண்க.

     3. அகத்திடுதல்."கவவகத் திடுதல்" (தொல். சொல். 357)

     "செவ்வாய் கவவின வாணகை" (திருக்கோ. 108)

     4. உள்ளீடு.

     "கவவொடு பிடித்த வகையமை மோதகம்" (மதுரைக். 626)

     கவவுக்கை = அணைத்த கை.

     "திங்கண் முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய்" (சிலப்.7:52)

     கவர்தல் = 1. முயங்குதல்."கவர்கணைச் சாமனார் தம்முன்"
     (கலித். 94 : 33)

     2. அகப்படுத்துதல், பற்றுதல்.

     "மூங்கிற் கவர்கிளை போல" (பதிற்றுப். 84 : 12)

     3. பறித்தல், பறித்துண்ணுதல்.

     "கனியிருப்பக் காய்கவர்ந் தற்று." (குறள். 100)

     4. கொள்ளையடித்தல்.

     "வீடறக் கவர்ந்த வினைமொழிந் தன்று" (பு.வெ. 3: 15, கொளு)

     5. பெறுதல்.

     "வறியோர் கவர........எறிந்து" (தஞ்சைவா. 20)

     கவர்ந்தூண் = அடித்துண்ணும் உணவு.

     "பசியெருவை கவர்ந்தூ ணோதையும்" (மணிமே. 6 : 117)

     கவைத்தல் = 1. அணைத்தல்.

     "ஒய்யெனப் பிரியவும் விடாஅன் கவைஇ" (குறிஞ்சிப். 185)

     2. அகத்திடுதல்.

     "ஆரங் கவைஇய மார்பே" (புறம். 19 : 18)

     கவறு = 1. பிறர் பொருளைக் கவரும் சூதாட்டம்.

     "..........................கள்ளுங் கவறுந் திருநீக்கப் பட்டார் தொடர்பு"
     (குறள். 920)

     2. சூதாடு கருவி.

     "அரும்பொற் கவறங் குருள" (சீவக. 927)

மனப்பற்று

    கவர்தல் = விரும்புதல்.

     "கவர்வுவிருப் பாகும்" (தொல். சொல். 362)