|
[''Then follows....on which basis the
classification of long and short vowels are made as having one and two
matras respectively,'' என்னும் மூலப் பகுதியிலுள்ள நிரனிறை வழு அச்சுப்
பிழையாகத் தெரிகின்றது.]
''வடவேங்கடந்
தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு
நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்துஞ் சொல்லும் பொருளும்
நாடிச் செந்தமிழ் இயற்கை சிவணிய
நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட
எண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு
பனுவல்''
என்னும் பனம்பாரனார் பொதுப்பாயிரத்தொடு பர்.
தெ.பொ.மீ.-யின் கொள்கை முற்றும் முரண்படுதல் காண்க.
கூற்று புள்ளி ''அவர்
(தொல்காப்பியர்) சில எழுத்துகளின் வரிவடிவைக் கூறப் புகுமிடத்துப்
புள்ளிக்கொள்கையைப் புகுத்துகின்றார். வேறோ ரிடத்தில் விளக்கியுள்ளவாறு, அவர்
புள்ளியுடைய மெய்யெழுத்துகளொடு தொடங்கியிருக்க வேண்டுமென்பது விளங்கக்கூடியது. எகர ஒகர
உயிர்க் குறில்களும் புள்ளி பெற்றுள்ளன. இது உயிர்மெய் என்னும் அசை
யெழுத்தைப்பற்றிக் கூற வழிகாட்டுகின்றது. இவற்றிற்கிடையே மிகக் குறுகிய மகரமாகிய
மகரக்குறுக்கத்தின் வண்ணனை வருகின்றது. அதன் வரிவடிவம் புள்ளிக்கு அல்லது
மெய்யெழுத்திற்கு முன்பே கூறப்படு கின்றது. இன்னோ ரொழுங்கின்மையும் உள்ளது. நூன்மரபு
எழுத்தொலி களைத் தனித்த வடிவிற் கூறுகின்றது. மொழிமரபு அவற்றின் புணரியல்
வேறுபாடுகளைக் கூறுகின்றது. இவ் வேறுபாட்டிற்கு மாறாக, ஒரு புணரியல் வேறுபாடாகிய மகரக்
குறுக்கம் நூன்மரபிற் கூறப்பட்டுள்ளது. தெளிவாக, இது ஓர் இடைச்செருகல். மயிலைநாதர்
மகரக்குறுக்கத்திற்கு மேற்கோள் வேறு நூல்களினின்று காட்டித் தொல்காப்பியத்தினின்று
காட்டாமை, சிறப்பாகக் கவனிக்கத் தக்கது. மகரக்குறுக்கம் பற்றிய தொல்காப்பிய
நூற்பா பிற்காலத் தொல்காப்பியத்தைச் சேர்ந்ததாயிருக்கலாமா?''
மறுப்பு புள்ளியென்பது
தொல்காப்பியர் புதிதாக வகுத்ததன்று. உயிர், மெய், உயிர்மெய் என்னும் மூவகை
யெழுத்தும் முதன்முதலாகக் கொண்ட தமிழ் நெடுங்கணக்கு, வரலாற்றிற்கெட்டாத குமரிநாட்டு
வினையினீங்கி விளங்கிய வறிவின் முனைவன் கண்டது. மெய்யெழுத்திற்குக் குறியாகக்
கொள்ளப்பட்டது புள்ளி. இது பின்னர் விரிவாக
விளக்கப்படும். |