|
மொழிமரபிலும், மெய்ம்மயக்கங்களை
நூன்மரபிலும், எடுத்துக் கூறு கின்றார்.....இம் மெய்ம்மயக்கம் தனிச்
சொல்லிலும் தொடர்ச் சொல்லிலும் கூட்டுச் சொல்லிலும் நிகழும். எங்ஙன மிருப்பினும்,
நச்சினார்க்கினியர் தனிச் சொல்லில் வழங்கும் மெய்ம்மயக்கங்களையே எடுத்துக் கூறி,
எடுத்துக் காட்டில்லாத மெய்ம்மயக்கங்களெல்லாம் இறந்துபட்டன என்றொரு கொள்கையை
மேற்கொள்கின்றார். உண்மையில் நூன்மரபிற் கொவ்வாத சுட்டுவினா அடிகளும் அதிற்
கூறப்பட்டுள்ளன.
மறுப்பு ஆரிய இனம் தோன்று முன்பே
முத்தமிழிலக்கணம் குமரிநாட்டில் முழு வளர்ச்சியடைந்திருந்ததனாலும், முல்லை நாகரிக
நிலையினரான ஆரியர் இந்தியாவிற்குட் புகுந்த காலத்தில் வடஇந்தியாவில் தமிழரும்
வதிந்திருந்ததனாலும், இராமாயணக் காலத்திலேயே அகத்தியர் தென்னாடு வந்து ''என்றுமுள
தென்றமிழ் இயம்பி'' மாபிண்டமாகிய அகத்தியம் இயற்றியதனாலும், ஆரிய
முதலிலக்கியமாகிய இருக்கு வேதம் இந்தியா விலேயே இயற்றப்பட்டதனாலும், பல
பிராதிசாக்கிய நூற்பாக்கள் தொல்காப்பிய நூற்பாக்களை ஒத்திருப்பதனாலும்,
பாணினீயத்துக்கு முந்திய முதற் சமற்கிருத இலக்கணமாகிய ஐந்திரம் தமிழகத்திலேயே
தோன்றி மறைந்ததனாலும், பிராதிசாக்கியங்கட் கெல்லாம் தமிழிலக்கணமே மூலம் என்பது
வெள்ளிடை மலையாம்.
உடனிலை மெய்ம்மயக்கம், வேற்றுநிலை
மெய்ம்மயக்கம் என்னும் இருவகை மெய்ம்மயக்கங்களுள், பின்னதைப் பற்றிய
தொல்காப்பிய நூற்பாக்களின்படி, பல மெய்ம்மயக்கங்கள் தொகைச்சொல் என்னும்
கூட்டுச் சொற்களிலும் தொடர்ச் சொற்களிலுமே நிகழும்.
|
எ-கா : |
ள்ச |
- |
நீள்சினை, |
ல்ய |
- |
கொல்யானை, |
|
ள்ய |
- |
வெள்யாறு, |
ண்ச |
- |
வெண்சாந்து, |
|
ண்ஞ |
- |
வெண்ஞாண், |
ண்ய |
- |
மண்யாறு, |
|
ண்வ |
- |
எண்வட்டு, |
ன்ச |
- |
புன்செய், |
|
ன்ஞ |
- |
மென்ஞாண், |
ன்ய |
- |
இன்யாழ், |
|
ன்வ |
- |
புன்வரகு, |
ம்வ |
- |
வரும் வண்ணக்கன், |
|
ய்ச |
- |
எய்சிலை, |
ர்ச |
- |
வார்சிலை, |
|
ழ்ச |
- |
வாழ்சேரி, |
ய்ஞ |
- |
பாய்ஞெகிழி, |
|
ர்ஞ |
- |
நேர்ஞெகிழி, |
ழ்ஞ |
- |
வாழ்ஞெண்டு, |
|
ர்ய |
- |
போர்யானை, |
ழ்ய |
- |
வீழ்யானை, |
|
ய்ங |
- |
வேய்ங்ஙனம், |
ர்ங |
- |
வேர்ங்ஙனம், |
|
ழ்ங |
- |
வேழ்ங்ஙனம். |
|
|
|
ஞ்ய, ந்ய, ம்ய, வ்ய, என்பவற்றிற்கு
உரையாசிரியர் காட்டிய உரிஞ்யாது, பொருந்யாது, திரும்யாது, தெவ்யாது என்பவற்றை
உரிஞ்
|