பக்கம் எண் :

தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி 109

-109-

7. தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி

. . . . யானை, பொருந்யாறு, திரும்யாமை, தெவ்யாடு என மாற்றின், நச்சினர்க் கினியர் கூறும் குற்றம் நீங்கிவிடும்.
'எல்லாத் தொகையும் ஒருசொல் நடைய' (எச்ச. 24)
என்று தொல்காப்பியமே கூறுவதால், மெய்ம்மயக்கத்துக்குத் தனிச்சொற் போன்றே கூட்டுச் சொல்லும்  கொள்ளப்படும்.
இன்று தனிச்சொல் எடுத்துக்காட்டில்லா மெய்ம்மயக்கங்கள் சிலவற்றுக்கு, முன்காலத்தில் தனிச்சொல்லிருந்து பின்னர் இறந்துபட் டிருக்கலாம். ஆயின், தனிச்சொல்லே எடுத்துக்காட்டுக்குத் தகும் என வரையறுப்பது பொருந்தாது.

. . . . ஒரே சொல் அல்லது எழுத்தமைதி வெவ்வேறு வகையில் வெவ்வேறு இயலுக்கு உரியதாகலாம். ''அம்ம'' என்னும் விளிப்பெயர் கேட்பிக்கும் இடைச்சொல்லாயின் இடையியலுக்குரியது. கருவி என்னும் தொகுதிப் பெயர் செய்யுள் வழக்குப்பற்றி உரியியலுக்குரியது. இங்ஙனமே சில மெய்ம் மயக்கங்களும் எழுத்தியலுக்கும் புணரியலுக்கும் உரியனவாகும். ஆதலால், 'கட்சிறார் கற்சிறார் என்பன இருமொழிப் புணர்ச்சியாகலின் ஈண்டைக்காகா' என்று நச்சினார்க்கினியர் விலக்குவது பொருந்தாது.

. . . . இனி, ந்ய, ண்ய, ம்ய, ன்ய என்பன போன்ற மெய்ம்மயக்கங்கள் தமிழில் தனிச்சொற்குப் பொருந்தாவாதலின், என்றும் கூட்டுச் சொல்லி லேயே நிகழும். அவற்றைத் தனிச்சொற்கும் உரியனவென்று கூறி, தமிழை வடமொழி வண்ணமாக்கவும் வடமொழி வழியதெனக் காட்டவும் முயல்வர், அகப்பகையும் புறப்பகையுமாகிய தமிழ்ப்பகைவர் சிலர்.

. . . . சுட்டெழுத்துகளும் வினாவெழுத்துகளும் தமிழ் மரபெழுத்து களாதலின், அவையும் தொல்காப்பிய நூன்மரபிற் கூறப்பட்டுள்ளன. அசோகன் கல்வெட்டுப் பிராமி யெழுத்தினின்று தமிழ் நெடுங்கணக்குத் தோன்றிற்றென்று மயங்கியோ மயங்காதோ கூறுவதனாலும், இச் சுட்டெழுத்தும் வினாவெழுத்தும் வடமொழியிலின்மையால வடமொழி யிலக்கணத்தில் கூறப்படாமையாலும், இவ் விருவகை யெழுத்துகளும் நூன் மரபிற்குப் பொருந்தாவெனப் பர். தெ. பொ. மீ. கூறுவது அவர் பிறழ் வுணர்ச்சியையே பிறங்கக் காட்டும்.

கூற்று
மொழிமரபு
, . . . . அடுத்த இயல் மொழிமரபு. இதில் அவர் இ,உ, ஆய்தம்  என்னும் மூன்றன் குறுக்கங்களாகிய புணரியல் வேறுபாடுகளைக் கூறுகிறார். அம் மூன்றும் தனிச்சொற்களிலும் புணர்ச்சொற்களிலும் நிகழ்கின்றன. சமற்கிருதப் புலுதம் (ப்லுத) என்னும் உயிரளபெடையை அறிந்துகொண்டு, இருமாத்திரைக்கு மேலொலிக்கும் நெட்டுயிர் தமிழில் இல்லை யென்று