பக்கம் எண் :

110மறுப்புரை மாண்பு

-110-

7. தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி

        ஏற்கெனவே வாசகரை  எச்சரித்திருக்கின்றார். ஆயின், ஆறாம் நூற்பாவிற் கூறியுள்ளதையே ஏன் இங்குத் திருப்பிக் கூறவேண்டு மென்பது தெளிவா யில்லை. ஒருகால், அளபெடை உயிர்நெடிலின், புணரியல் வேறுபாடாக நிகழ்கின்றதென்று இங்குக் கூறுகின்றார் போலும்!''

மறுப்பு
        தொல்காப்பியம் இடைக்கழகக் காலத்தில் இயன்ற பல்வேறு தனித்தமிழ் முன்னூல்களினின்று தொகுத்த தொகைச் சார்பு நூலாதலின், வடமொழிப் புலுத அறிவைக்கொண்டு.
''மூவள பிசைத்தல் ஓரெழுத் தின்றே'' (எழுத்து. 5)
என்று தொல்காப்பியர் கூறினார் என்னுங் கூற்று, கூற்றுப்போற் கொடியதே.

''எழுத்தெனப் படுப.......முப்பஃதென்ப.'' (எழுத்து. 1)

''அ இ உ எ ஒ.......குற்றெழுத் தென்ப.'' (எழுத்து. 3)

''ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஓள.....நெட்டெழுத் தென்ப.'' (எழுத்து. 4)

''நீட்டம் வேண்டின்....என்மனார் புலவர்.'' (எழுத்து. 6)

என்று பலர்பாலிலேயே தமிழமுன்னூலாரைத் தொல்காப்பியர் குறித் திருத்தல் காண்க.

        ''ஈரளபிசைத்தல் ஓரெழுத் தின்றே'' என்று வரையறுத்ததனால், அதற்கு விலக்காக வரும் சிறுபான்மை நிகழ்ச்சியான அளபெடையை மாணவன் அறிதற்பொருட்டு, அதனையடுத்து, நீட்டம் வேண்டின்..... என்மனார் புலவர்,'' என்று பொதுப்படச் சுருக்கிக் கூறினார். ஆயின், உயிரள பெடை என்று எவ்வாறு  நிகழுமென்றும், அதற்கு அடையாளம் எதுவென் றும், எத்தனை மாத்திரையென்றும், விரிவாகத் தெரியவேண்டுதலின், அவற்றை இங்கு மொழிமரபிற் கூறினார். எழுத்தின் தனிநிலை பற்றியது எழுத்தியல்; அதன் சொன்னிலை பற்றியது மொழியியல்.

        ஓரெழுத்துச் சொல்லாயின், தனிநிலையிலும் இருவகை வழக்கிலும் அளபெடை நிகழும்.
எ-கா : ஏஎஎஎ அண்ணா!-உலகியலளபெடை
  ''ஓஒ இனிதே'' (குறள். 1176) - செய்யுளியலளபெடை

கூற்று
       'ஒலியியற் சொல்லைப் பின்னர் ஆயத்தொடங்கி ஓரெழுத்துச் சொல், ஈரெழுத்துச் சொல், மூவெழுத்துச் சொல் என அதை மூவகையாக வகுக்கின்றார். அதன்பின் முதலெழுத்துகளைப் பற்றிக் கூறுகின்றார். மகரக் குறுக்கம் மீண்டும் ஒருமுறை சொல்லப்படுகின்றது. ஐகாரக் குறுக்கமும் சொல்லப்படுகின்றது. மூன்றிற்கு  மேற்பட்ட புணரியல் எழுத்து வேறுபாடு களை அவர் ஒப்புக்கொள்ளாவிடின், இக் குறுக்கங்களை இவ்விடத்திற