1. ஆங்ஙனம் என்பது ஆங்கு-அனம் எனப்
பிரியும். 2. அங்கிட்டு என்பது அங்கு-இட்டு எனப் பிரியும்.
''எல்லாச்
சொல்லும் பொருள்குறித் தனவே.'' என்னும் தொல் காப்பியம்
உண்மையானதாம்.
முடிவு: நன்னூல் நன்னூலே என்னுங்
கட்டுரைக்கு உண்மையில் எதிர்மறுப்புத் தேவையில்லாவிடினும், ''பல்குழுவும்
பாழ்செய்யும் உட்பகையும் கொல்குறும்பும்'' சேர வியலும் இற்றைத் தமிழ்நாட்டின்
சீர்கெட்ட நிலை நோக்கி, தமிழ் மாணவர் மருள் நீங்கித் தெருளும் வண்ணம்
தென்றலிதழின் கட்டுரையிடச் சிறுமைக்கும் என் ஒழிவு நேரக் குறுமைக்கும் ஏற்ப, சுருங்கச்
சொல்லன் முறையில், ஓரளவு வரைந்தேன்.
தமிழ்நாடு தமிழுக்குச் சிறப்புரிமையின்றிப்
பொது நாடாயிருக்கு மளவும், தமிழக் கொள்கைகள் தலையெடா. அறியாமையிலும் அடிமைத்
தனத்திலும் மயங்கிக் கிடக்கும் இளங்காளையர் உள்ளம் தளிர்ப்பெய்துமாறு, தென்றல்
வீசுகின்றது. தெளிந்தெழுக.
இதனால், நன்னூல் அறவே தீ நூல் என்பதன்று. அதிலும் சில
நற்கூறுகள் உள. ஆயின், தமிழின் உயிர்நாடியான தனித் தன்மைக்கும் தமிழ்மொழி
நூலுண்மைக்கும் மாறான பல கருத்துகள் உண்மையின், அது முற்றும் நன்னூலன்று என்பதே, நன்னூல்
நன்னூலா? என்னும் கட்டுரைக்கும் இம் மறுப்பறுப்புக்கும் முடிபும் என்க.
- ''தென்றல்''
16.11.1957 |