சொல் - சோல் - சோர்.
சோர்தல்= உள்ளிருந்து கசிதல், வடிதல், விழுதல், தளர்தல், சோர்(க.)
, சோலு (தெ.). சோர் - சோரி-வடியும்
அரத்தம். சோல - (சோன்) - சோனம் = சொரியும்
முகில். சோன் - சோனை = பெருமழை வீழ்ச்சி,
கார்முகில். சோனையா (ம்) மாரி-சோனாமாரி.
இச் சொற்களால், சுருங்கை என்பது சுல் என்னும்
அடிவேரினின்று, தோன்றி, சுரி என்னும் சொல்லோடு தொடர்புடையதாய், துளைக்கப்பட்டது
என்னும் பொருளில் கீழ்நில வழியைக் குறிக்கும் என்பது தெளிவாம்.
கன்னல் கல்லுதல் =
கில்லுதல், தோண்டுதல், குடைதல். ''மலைகல்லி
எலிபிடிக்கிறது'' என்பது ஒரு சொலவடை.
கல்-கலம்= மரம், கல் முதலியவற்றிற் குடைந்து செய்யும் ஏனம்,
தோணி. கல்-கன் = உட்குழிந்த
துலைத்தட்டு, செப்புக் கலம், செப்புக்கலத்
தொழில், செம்பு. கன்-கன்னான் = செப்புக்கலம் செய்யும்
கம்மாளன். கன்-கன்னம்= துளையுள்ள காது, காதை யடுத்த
அல்லது உட்குழிந்த கதுப் பு (ஒ.நோ: செவி-செவிடு =
காதை யடுத்த கன்னம்), துலைத்தட்டு, கள்வர் சுவரிலிடும்
துளை. ''செவிட்டைக் கட்டி அடித்தான்'' என்னும் வழக்கை
நோக்குக. கன்-கன்னல் = 1. நீர்க்கலம். ''தொகுவாய்க் கன்னல் தண்ணீ
ருண்ணார்'' (நெடுநல். 65). 2. நாழிகை
வட்டில். ''கன்னலின் யாமங் கொள்பவர்'' (மணிமே. 7 :
65). 3. நாழிகை வட்டிலால் அறியப்படும் கால
அளவு. 4. உட்டுளையுள்ள புல்வகையைச் சேர்ந்த
நாணற்கரும்பு. 5. கருப்பஞ் சாற்றிலிருந்து செய்யப்படும்
சருக்கரை அல்லது கற்கண்டு. 6. சருக்கரை
கலந்து அடும் அடிசில் (பாயசம்). ஒ.நோ. : நுள்-நள்-நாளம் = உட்டுளை, உட்டுளையுள்ள
தண்டு. நள்-நாள்-நாளி-நாழி = உட்டுளையுள்ள மூங்கிற்படி, படி, அம்புப்
|