பக்கம் எண் :

68மறுப்புரை மாண்பு

-68-

 

6. பேரா.தெ.பொ.மீ.தமிழுக்கதிகாரியா?

 

புட்டில், நெசவுக்குழல், நாழிகை வட்டில், நாழிகை.
நாழி-நாழிகை = நாழிகைவட்டில், நாழிகை நேரம்.
உண்ணாழிகை = படிம அறை (கருப்பக்கிருகம்).
நாள்-(நாளல்)-நாணல் = உட்டுளையுள்ள புல்வகை.
கன்னல் - Gk. kanna (read). L.kanna, OF. cane, ME, can(n)e,
          E.cane, Hele.ganeh.
          E.sugar - cane
= கரும்பு.
 இனி, கல் = கருமை, கல்-கன்-கன்னல் = செங்கருப்பானது என்றுமாம், ஒ. நோ: கரு - கரும்பு  = கரியது, கல் - கள் - காள் - காளம் = கருமை. கல் + து = கஃறு  (கருமை).

ஓரை
    ஒல்லுதல் = பொருந்துதல், கூடுதல். ஒல்-ஒர்-ஓர்-ஓரை=கூட்டம். மகளிர் கூட்டம், உடுக்களின் கூட்டம் (இராசி, sign of zodiac
) 'இலக்கினம்'  என்னும் ஒரை யெழுச்சி (இராசியுதயம்) நன்முழுத்தம் (சுபமுகூர்த்தம்).

    ''மகளிர் ஈட்டமும் மற்றவ ராடலும்
    அவர்விளை யாடுங் களமும் இராசியும்
    ஓரிடைச் சொல்லும் குரவையும் ஓரை'' 
(10 : 225)

என்பது பிங்கலம்.

    இராசி (ராசி) என்னும் வடசொல்லும், constellation என்னும் இலத்தீன் வழி யாங்கிலச் சொல்லும், (உடுக்களின்) கூட்டத்தை உணர்த்துதல் காண்க.

    ஒரு மணி நேரத்தைக் குறிக்கும் hour என்னும் ஆங்கிலச் சொல்லின் மூலமான hore என்னும் கிரேக்கச் சொல் வேறு; பன்னிரு விண்மீன் கூட்டத்தையும் அவை எழும் மங்கல அல்லது ஆட்சி நேரத்தையும் குறிக்கும் ஓரை என்னும் தமிழ்ச்சொல் வேறு. இவ் விரண்டையும் தொடர்பு படுத்தியது தென்சொல்லை வடசொல்லாகக் காட்டும் ஆரியத் தமிழ்ப் பகைவர் செயல். அதை அவரடியாரும் பின்பற்றி வருகின்றனர்.

    களவொழுக்கத் தலைவன் தன் இன்ப முதிர்ச்சி யொன்றே கருதுவதனால், அதற்குத் தடையாயுள்ள வழியருமை, விலங்கச்சம், வேளைத்தீங்கு, தலைவியுறவினர் சினம் முதலியவற்றைச் சிறிதும் பொருட்படுத்துவதில்லை. இதனையே,

    ''மறைந்த வொழுக்கத்து ஓரையும் நாளும்
    துறந்த வொழுக்கம் கிழவோற் கில்லை''
 
(1081)

    ''ஆற்றின தருமையும் அழிவும் அச்சமும்
    ஊறும் உளப்பட அதனோ ரன்ன''
 
(1082)

    என்னும் தொல்காப்பிய நூற்பாக்கள் குறிக்கும்.
    (நாள் - நட்சத்திரம். ஓரை-இராசி. இலக்கினம்)