பக்கம் எண் :

74மறுப்புரை மாண்பு

-74-

 

6. பேரா.தெ.பொ.மீ.தமிழுக்கதிகாரியா?

 

    பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்னும் பேதை வேந்தர் காலத்திலேயே அது தன் பெருமையை முற்றும் இழக்க நேர்ந்தது. தமிழரின் தாய்மொழி யுணர்ச்சி கொல்லப்பட்டதினால் பிற்கால மூவேந்தர் காலத்தில் பல அயன்மொழிச் சொற்கள் மொழிபெயர்க்கப் பெறாது தமிழில் தாராளமாய்ப் புகுந்து வழங்கத் தலைப்பட்டன. அதன்பின் நாயக்க மன்னரும் மராட்டிய மன்னரும் ஆண்ட காலத்தில், தமிழ்நிலை முன்னினும் பன்மடங்கு கெட்டது. இறைவனருளால் ஆங்கிலேயர் வந்த பின்பே, தமிழர் ஆங்கிலக் கல்வியின் பயனாக மீண்டும் அறிவுக்கண் திறக்கப்பெற்று, தமிழின் தனிப் பெருமையையும் ஆரிய ஏமாற்றையும் கண்டு தமிழைத் தூய்மைப்படுத்தி வருகின்றனர். பிறமொழிச் சொல்லால் தமிழ்த்தூய்மை கெடுவதுடன் தமிழ்ச்சொற்கள் வழக்கிறந்தும் இறந்துபட்டும் போகின்றன.

அரபிச்சொல் தமிழ்ச்சொல் அரபிச்சொல் தமிழ்ச்சொல்
 வசூல்  தண்டல்  காயம்  நிலைப்பு
 தபா   தடவை  ஜேப்பி  சட்டைப்பை
 ரஜா  விடுமுறை  சைத்ான்  அலகை
 இமாம்  தொழுவாசான்  தகவல்  செய்தி
 இலாகா  திணைக்களம்,துறை  தாக்கீது  கட்டளை
 பிஸ்மில்லாஹி  கடவுள் திருப்பயரால  தலாலி  தரகு
 உருசு  திருவிழா  நகாரா  பேரிகை
 கலிமா  நம்பக மந்திரம்  மக்கர்  இடக்கு
     மால்  அரண்மனை

    தமிழைப் பிறமொழிகள்போற் கருதிக்கொண்டு, கடன் சொல் எல்லாம் வளர்ச்சியெனக் கருதுவது கண்மூடித்தனமாகும். விவசாயம் என்னும் வடசொல் உழவு, பயிர்த்தொழில், பாண்டியம், வெள்ளாமை, சாகுபடி முதலிய தென்சொற்களை வழக்கு வீழ்த்தி வருவதையும், ஜன்னல் என்னும் போர்த்துக்கீசியச் சொல் பலகணி, சாளரம், காலதர் என்னும் தென் சொற்களை வழக்கு வீழ்த்தியிருப்பதையும், கண்டு உண்மை தெளிக.