சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியில் ஆயிரக்
கணக்கான தென்சொற்கள் விட்டுப் போயிருப்பதும், பல தமிழ்ச் சொற்கட்குத் தவறாகப்
பொருள் கூறியிருப்பதும், பல சொற்கட்கு எல்லாப் பொருளும் கூறாமையும், .ஆயிரக்கணக்கான
அயற்சொற்களை வேண்டாது சேர்த்திருப்பதும், அடிப்படைத் தென்சொற்களிற்
பெரும்பாலானவற்றை வடசொல்லாக அல்லது பிற சொல்லாகக் காட்டியிருப்பதும்,
சொற்களையும் மரபு வழக்காறுகளையும் தவறான வடிவிற் குறித்திருப்பதும், இவ் வழுக்களை
யெல்லாம் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக இருமுறை தெளிவாக எடுத்துக் காட்டியும் எள்ளளவும்
பொருட்படுத்தாமையும், சென்னைப் பல்கலைக்கழகம் தமிழுக்கு மாறான தென்பதையும் இன்று
நடைபெறும் இந்திய பாக்கித்தானப் போர் இந்தியாவுக்கு வெற்றியாக முடிந்த பின் அதனை
மாற்றியமைக்க வேண்டுமென்பதனையுமே நமக்கு வற்புறுத்திக் காட்டுகின்றன.
''சென்னைப்
பல்கலைகழகத் தமிழகராதியின் சீர்கேடு'' என்னும் என் திறனாய்வைக் கண்ட பின்னும்,
நம் பேராசிரியர் அவ் வகரமுதலியை ஓர் அளவைநூலாகக் கொண்டிருப்பது,
'காணாதாற் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாந் தான்கண்ட
வாறு'. (குறள். 849)
என்னுந் திருக்குறளையே
நினைவுறுத்துகின்றது.
தமிழ்நாட்டில் எத்தனையோ பிற நாட்டு மக்கள் வந்து
வாழ்கின்றனர். அவர்களின் அரசியற் சொற்களும் சமயவியற் சொற்களும் பிற துறைச்
சொற்களும் தமிழ்நாட்டில் வழங்குகின்றன. ஆயின், அவற்றை யெல்லாம் தமிழ்
அகரமுதலியிற் சேர்ப்பதும், தமிழ்ச்சொற்களென்று கொள்வதும், பேதைமையாகும். ஒரு
நாட்டுப் பொதுவழக்கான மொழிவழக்கும் குழு வழக்கான அயலார் வழக்கும் வெவ்வேறாம்.
இஜ்ஜத்து (கண்ணியம், மானம்), இஜாஸத்து (உத்தரவு),
இஷா (மாலை, மாலைத் தொழுகை), இஷாரா (குறிப்பு), இஷு க்கு (அன்பு, பற்று), இஷு ராக்கு
(விடியல், பொழுது புறப்பாடு), இஸ்திக்பார் (மன்னிப்பு வேண்டல்), இஸ்திலாக்கு
(குழூஉக்குறி), இஸம் ( பெயர்), இஸீராபு (ஊதாரித்தனம்), இஹஸான் (நன்றி) -
இத்தகைய சொற்களைத் தமிழென்று கொள்பவன் தமிழறியாதவன் அல்லது தமிழ்ப் பகைவனாகவே
யிருத்தல் வேண்டும்.
22. 'வசூல், தபா (முறை) ரஜா, இமாம், இலாகா, பிஸ்மில்லா,
உருசு, கலிமா, காயம்(உறுதி), ஜேப்பி, சைத்தான், தகவல், தாக்கீது, தலாலி, நகாரா,
மக்கர், மால்(மகால்) முதலிய பல சொற்கள் அன்றாடப் பேச்சில் புகுந்து தமிழொடு
தமிழாய் வழங்குகின்றன'.
வேதகாலப் பிராமணர் தென்னாட்டுக்கு வந்ததிலிருந்தே தமிழ்
தாழ்த்தப்பட்டு வந்திருப்பினும் பல் வேள்விச்சாலை முதுகுடுமிப் |