பக்கம் எண் :

72மறுப்புரை மாண்பு

-72-

 

6. பேரா.தெ.பொ.மீ.தமிழுக்கதிகாரியா?

 

    4.  சமற்கிருதத் தமிழ்ப் பண்டிதர் - திருமான் பண்டித (வி.எம்.) கோபாலகிருட்டிணன் அவர்கள்.
    5.  கூடுதல்
(Additional) தமிழ்ப் பண்டிதர் - திருமான் பண்டித (எசு.) சோமசுந்தரம்) அவர்கள்.
    6.  உதவியாளர் - திருமான் (பி.ஆர்.) மீனாட்சிசுந்தரம் அவர்கள்.

    இவ் வறுவருள், முதல் நால்வரே முதன்மையும் பொறுப்பும் வாய்ந் தவர். அவருள்ளும், பதிப்பாளரும் தலைமைத் தமிழ்ப் பண்டிதருமே தலைசிறந்த பொறுப்பு வாய்ந்தவர். பதிப்பாளரின் தமிழ்ப்பணிச் சிறப்பு முன்னரே குறிக்கப்பட்டது. அரசியல் துறையில் இறவாப் பெயர் தேடிக் கொண்ட குவிசுலிங் (Quisling) என்னும் நார்வே படைத்தலைவர் போல், மொழித்துறையில் இறவாப் பெயர் தேடிக்கொண்ட பெருமான் அவர். பண்டித (எம்.) இராகவ(ஐயங்கார்) கம்பர் தனிப்பாடலில் ''முட்டிபுகும் பார்ப்பார்'' என்று இருப்பதனை இட்டமுடன் பார்ப்பார் என்று திரித்தும், ''ஐயர் யாத்தனர் கரணம் என்ப'' என்னும் தொல்காப்பிய அடியிலுள்ள ''ஐயர்'' என்னும் சொற்கு ஆரிய மேலோர் என்று உரை வரைந்தும் அருந்தொண்டாற்றியவர்.

    பண்டித (வி.எம்.) கோபாலகிருட்டிணமாச்சாரியார் அவர்களின் தமிழ்த் தொண்டு வடசொல் மிக்கனவும் அடிப்படைத் தென்சொற்களை யெல்லாம் வடசொல்லாகக் காட்டுவனவுமான அவர்கள் உரைநூல்கள் நன்கு விளக்கும்.

    ஒரு நாட்டு இலக்கியத்தில் எந்நாட்டவரும் தேர்ச்சி பெற முடியும். ஆயின், ஒரு நாட்டு மொழியில் அந் நாட்டாரே யன்றி அயலார் தேர்ச்சிபெற முடியாது. ஒரு மொழியின் மரபும் (Idiom) வழக்காறும் (Usage), ஒலிப்பியலும் (Intonation) நூல் வாயிலாய் அயலார் அறிந்துகொள்ள இயலாவாறு, அம் மொழியாளரின் உள்ளத்திலிருந்து தோன்றுவன. ஆதலால், ஒரு நாட்டிற் குடிபுகுந்தவரின் வழித்தோன்றியவரே, பல தலை முறைக்குப்பின் அந் நாட்டுப் பழங்குடி மக்கள்போல் மொழித்தேர்ச்சி பெற முடியும். அதற்கு அம் மொழிப் பற்றும் அந் நாட்டுப் பழங்குடி மக்களோடு இரண்டறக் கலப்பு அல்லது நெருங்கிய தொடர்பும், இன்றியமையாதன வாகும்.

    தமிழ்நாட்டுப் பிராமணர், தமிழையே தாய்மொழியாகக் கொண் டிருப்பினும், அவருள் ஒரு பகுதியாரின் முன்னோர் இங்கு வேத காலத்திலேயே வந்தவரேனும், தமிழ் இலக்கியத் தலைமை அதிகாரியான பர். சாமிநாதரும் தமிழ்மொழியில் தேர்ச்சி பெறாமைக்குக் கரணியம் வருமாறு.
      1.  தமிழ்ப் பற்றின்மை அல்லது தமிழை வடமொழிக்குத் தாழ்வாகக் கொண்டிருத்தல்.
     2.  இயன்றவரை மேன்மேலும் வடசொல்லையும் பிற சொல்லையும் வேண்டாது புகுத்தித் தமிழைக் கலவை மொழியாக்கல்.