பக்கம் எண் :

பேரா.தெ.பொ.மீ.தமிழுக்கதிகாரியா? 71

-71-

 

6. பேரா.தெ.பொ.மீ.தமிழுக்கதிகாரியா?

ஆட்சி மன்ற அகரமுதலிக் குழு (The Syndicate Lexicon Committee)
 
1. கனம் (சி.(G.) பித்தெந்திரிகு.
  2. திருவாளர் (Mr.) மார்க்கு அண்டர்.
  3. பர். (Dr.) (சே. (J.) எயிச்.) தோண் (Stone)
  4. மதிதகு (Hon'ble) திரு.(Mr.) முறையாளியர் (Justice) (பி.ஆர்.) சுந்தரம்).
  5. வயவர் (Sir) (கே.) இராமுண்ணி மேனன்.
  6. கனம் பர்.(ஈ.) மாண்டேய்து மேக்பேல்.
  இவ் வறுவருள்ளும் ஒருவரேனும் தமிழ் இனத்தாரல்லர்.

தமிழ் அகரமுதலிக் குழுத் தலைவரின் தொடர்முறைப் பட்டி (Succession list of Chairmen of the Tamil Lexicon Committee)
 
1. கனம் (சே.(J.) எசு.) சாந்திலர்.
  2. வயவர் (பி.எசு.) சிவசுவாமி.
  3. மதிதகு திரு. முறையாளியர் (தி.வி.) சேசகிரி.
  4. அராவ ஆண்டகை (கே.வி.) கிருட்டிணசாமி.
  இந் நால்வருள்ளும் ஒருவரேனும் தமிழ் இனத்தாரல்லர்.

பதிப்பாளர் தொடர்முறைப்பட்டி (Succession list of Editiors)
 
1. கனம் (சே. (J.) எசு.) சாந்திலர்.
  2. திருமான் (எசு.) அனவரதவிநாயகம் அவர்கள்.
  3.   '' (சி.பி.) வேங்கடராமன் அவர்கள்.
  4.   '' பர். (பி.எசு.) சுப்பிரமணியம்.
  5.     '' (எசு.) வையாபுரி அவர்கள்.

    இவ் வைவருள், கனம் சாந்திலர் தமிழ்ப் பற்றும் நடுநிலையும் ஊக்கமும் தொகுப்பு முறையறிவும் உடையவரேனும், மேனாட்டார். திரு.அனவரதவிநாயகம் தமிழ் வரலாறறியாது பிராகிருதத்திற்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பைப் பிறழ வுணர்ந்தவர். திரு.வேங்கடராமன் தமிழ்ப் புலமை நிரம்பாத பிராமணர். பர்.சுப்பிரமணிய (சாத்திரியார்) சமற்கிருத அடிப்படையில் தமிழைக் கற்றுத் தலைகீழாகவும் தாறுமாறாக வும் தமிழிலக்கணத்துக்கு உரை கூறுபவர். திரு.வையாபுரியாரோ தமிழைக் காட்டிக் கொடுப்பதில் குயக்கொண்டானை மேற்கொண்டவர்.

தமிழ் அகரமுதலிப் பதிப்பாண்மைப் பணிக்குழு (The Editorial staff of the Tamil Lexicon)
  1.  பதிப்பாளர் - திருமான் (எசு.) வையாபுரி அவர்கள்.
  2.  உதவிப் பதிப்பாளர் - திருமான் (வி.) நாராயணன் அவர்கள்.
  3.  தலைமைத் தமிழ்ப் பண்டிதர் - திருமான் பண்டித (எம்.) இராகவன் அவர்கள்.