பக்கம் எண் :

146வேர்ச்சொற் கட்டுரைகள்

     வேறு - வேற்றுமை = 1. வேறுபாடு. "வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்" (நாலடி.75). 2. மாறுபாடு. "காமம் புகர்பட வேற்றுமைக்கொண்டு பொருள்வயிற் போகுவாய்" (கலித்.12). 3. ஒப்புமையின்மை. 4. ஒரு பொருளின் வேறுபாடு காட்டற்குரிய தன்மை. 5. (இலக்.) பெயரின் இயல்பான எழுவாய்ப் பொருள் செயப்படுபொருள் முதலியனவாக வேறுபடும் நிலைமை.
 
"ஏற்கு மெவ்வகைப் பெயர்க்கும்வே றாய்ப்பொருள்
 வேற்றுமை செய்வன வெட்டே வேற்றுமை."
(நன். 291)
 
6. வேற்றுமை யணி (தண்டி. 49).
     வேறு-வேற்றவன் = 1. அயலான். "வேற்றவர்க் கெட்டா யோகர்" (சே.துபு. தோத். 43). 2. பகைவன். "வேற்றவ ரார்த்தனர்" (கம்பரா. இராவணன் வதை. 78).
     வேற்றாள் = அயலான - வன் - வள். "வேற்றா ளென்ன வொண்ணாதபடி" (ஈடு, 5 : 10 : 2)
     வேற்றான் = 1. அயலான். "வேற்றார்க டிறத்திவன் றஞ்சமென் வீரவென்றான்" (கம்பரா. வாலிவ. 33). 2. பகைவன். "வேற்றாரை வேற்றார் தொழுத விளிவரவு" (பரிபா. 20:71).
     வேறு-வேற்று = (கு. பெ. எ.) 1. வேறான. எ-டு: வேற்றிசை, வேற்றுத்தளை, வேற்றுநிலை மெய்ம்மயக்கம், வேற்றுப்பொருள் வைப்பு. 2. அயலான. எ-டு: வேற்றுக்குரல், வேற்றுத்தாய், வேற்றாள், வேற்றுமுகம். 3. மாறான, பகையான, எ-டு:வேற்றரசு, வேற்றுமுனை.
வேற்றுவன் = மாறுகோலங் கொண்டவர், "நூற்றுவர் முற்றி வேற்றுந ராகென" (பெருங். மகத. 1: 94).
வேற்றுநர் = அயலான். "வேற்றுவரில்லா நுமரூர்க்கே செல்லினும்" (சீவக. 1550).
     விள்-விய்-வியல் = (பெ.) 1. அகலம், விரிவு, பரப்பு. "வியலென் கிளவி யகலப் பொருட்டே" (தொல். உரி. 66). 2. பெருமை. "மூழ்த்திறுத்த வியன்றானை" (பதிற்.33:5). 3. மிகுதி (சிலப். 5:7 உரை). 4. பொன் (சங். அக.). 5. மரத்தட்டு (அக. நி.). 6. காடு (பிங்.). 7. பலதிறப்படுகை. "வியன்கல விருக்கையும்" (சிலப். 5:7).
     வியல் = (கு. பெ. எ.) அகன்ற, பரந்த. "விழவு வீற் றிருந்த வியலு ளாங்கண்" (பதிற் 53:1). "இருநீர் வியனுலகம் வன்சொலா லென்றும் மகிழாதே" (நன்னெறி, 18).
     வியல்-வியலிகை = பெருமை (யாழ். அக.).
     வியல்-வியலம்-வியாழம் = 1. ஒரு பெருங்கோள். "முந்நீர்த்திரை யிடை வியாழந் தோன்ற" (சீவக. 2467) 2. வியாழக்கிழமை. "திருத்தகு