|
| எல்லிருள் = இராவிருள். |
| எல் - எல்லி = 1. இரவு. "எல்லியிது காலையிது" (சீவக. 1877) |
| 2. இருள். "நீரரை யெல்லியியங்கன்மினே" |
| (இறை. 20, எடுத்துக்காட்டுச் செய்யுள் 217) |
| எல்லிநாயகன் = திங்கள். எல்லிப்பகை = கதிரவன். |
| எல் - என் - ஏன் = கரியவிலங்கான பன்றி. |
| "ஏனொருவனா யெயிற்றில் தாங்கியதும்" (திவ். இயற். நான். 70) |
| ஏன் - ஏனம் = பன்றி |
| "இருள்நிறப் பன்றியை ஏனம் என்றலும்" (தொல். பொ. 623.) |
| ஏன் - ஏனல் = கருந்தினை (சூடா). |
| ஏன் - ஏனை - யானை - ஆனை. |
| இன்றும் யானையை ஏனை என்னும் வழக்கு நெல்லை நாட்டில் உள்ளது. |
| T. enuga, M.ana, K., Tu. ane. |
| இரு - எரு - எருமை = கரியமாடு. "குவிமுலை படர்மருப் பெருமை" (சீவக. 2102). |
| M. eruma, Tu. erme, t.enumu, K. emme. S. heramba. |
| எருமை மறம் = மறவனொருவன் தன் படை முதுகிடவும் பகைவர் படையைத்தான் அஞ்சாது எதிர்த்து நிற்கும் புறத்துறை (பு.வெ. 7, 13) |
| |
| "ஒருவ னொருவனை யுடைபை ட புக்குக் | கூழை தாங்கிய எருமையும்" (தொல். பொ. 72) |
|
| |