|
| இளமட்டம் = 1. குறுமட்டக் குதிரை. 2. இளம்பருவத்தோன். இளமட்டம்-இளவட்டம் = இளைஞன். |
| மட்டு-மட்டி = 1. (தாழ்ந்த மதிநிலையுள்ள) மூடன் "அறியாத..... மூடமட்டி" (திருப்பு. 195). 2. பரும்படி. 3. மட்டிக்காரை. 4. மக்கு. 5. ஒழுங்கின்மை. 6. மட்டி வாழை (நாஞ்.). |
| மட்டித்தாள், மட்டித்தையல், மட்டிப்புடைவை, மட்டிவேலை முதலிய வழக்குகளை நோக்குக. |
| தெ., க. மட்டி(maddi). |
| மட்டு-மட்டை = 1. பயனற்ற-வன்-வள்-து. "இந்த மட்டைக் கிறுத்த தெல்லாம் போதும்" (விறலிவிடு. 889). 2. மட்டமான நெல். 3. மட்டமான அரிசி. |
| மட்டுக் கட்டுதல், மட்டுக்கு மிஞ்சுதல், மட்டுக் கோணம், மட்டுக்கோல், மட்டுத் தப்புதல், மட்டுத் திட்டம், மட்டுப்படுதல், மட்டுப் பிடித்தல், மட்டு மதிப்பு (மட்டு மரியாதை), மட்டு மதியம், மட்டு மருங்கு முதலிய வழக்குகளை நோக்குக. |
| முத்துதல் (முட்டுதல்) = பொருந்துதல், ஒத்தல். |
| முத்து(முட்டு)-மத்து (மட்டு) = அளவு. |
| மத்து-மத்தி. மத்தித்தல் = அளவிடுதல். |
| மத்தி-மதி. மதித்தல் = 1. அளவிடுதல். "மண் விழைந்து வாழ்நாள் மதியாமை" (திரிகடு. 29). 2. கருதுதல். "ஆடலை மதித்தான்" (கந்தபு. திருவிளை.1) 3. பொருட்படுத்துதல். "மண்ணாள்வான் மதித்துமிரேன்" (திருவாச 5:12). 4. ஊழ்குதல் (தியானித்தல்). "நந்தியங் குரவனை மதிப்பாம்" (விநாயகபு. கடவுள். 13). 5. துணிதல். "தேர்மணிக் குரலென விவண்மதிக்குமன்" (கலித். 126:7). |
| மதி-வ. மதி, மிதி. |
| OE., OS metan., OHG. mezzan, ON meta, Goth. metan, E. mete, to measure. | |
| மதி = 1. மதிப்பு. "நீண்மதிக் குலிசம்" (இரகு. யாகப் 92). 2. இயற்கை யறிவு. "மதிநுட்ப நூலோ டுடையார்க்கு" (குறள். 636). 3. பகுத்தறிவு. "மதியிலி மடநெஞ்சே" (திருவாச. 5 33). 4. அறியும் புலன் (intellect). 5. அறிவுடைமை. "மதிமை சாலா மருட்கை நான்கே" (தொல். மெய்ப். 7). |
| மதி-மதம் = 1. மதித்தறிந்து கையாளும் நூல் நெறிமுறை. |
| |
| "எழுவகை மதமே உடன்படல் மறுத்தல் | பிறர்தம் மதமேற் கொண்டு களைவே | தாஅ னாட்டித் தனாது நிறுப்பே | இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே |
|
| |