பக்கம் எண் :

முல்4 (பொருந்தற் கருத்துவேர்)67

 
பிறர்நூற் குற்றங் காட்டல் ஏனைப்
பிறிதொடு படாஅன் தன்மதங் கொளலே."
(நன். பொதுப். 11)
 
     2. அம்மை யிம்மை யும்மை(மறுமை) நிலைகளை மதித்தறிந்து கடைப்பிடிக்குங் கொள்கை. எ-டு:
     சிவமதம், திருமால் மதம், கடவுண் மதம்.
     முத்துதல் = பொருந்துதல், கலத்தல்.
     முத்து-மத்து = கலப்பு, கலக்கம், மயக்கம், மயக்கஞ் செய்யும் பித்தம், மயக்கந் தரும் கள், தீங்கள்ளாகிய தேன், பித்த முண்டாக்கும் ஊமத்தை.
     மத்து-மட்டு = 1. கள். "வெப்புடைய மட்டுண்டு" (புறம். 24). 2. தேன். "மட்டுவா யவிழந்த தண்டார்" (சீவக. 1145). மட்டுவார் குழலம்மை = மலைமகளின் பெயர்களுள் ஒன்று. 3. இன்சாறு. "கருப்புமட்டு வாய் மடுத்து" (திருவாச. 5 : 80). 4. காமக் குடிப்பு. "மட்டுடை மணமகள்" (சீவக. 98). 5. மட்டு வைக்குஞ் சாடி. "மட்டுவாய் திறப்பவும்" (புறம். 113). 6 (தேனிற் குந் தீங்கள்ளிற்கு முரிய) நறுமணம். "மட்டு நீறொடும்" (இரகு. இரகுவுற். 23).
     மத்து-மத்தம் = 1. மயக்கம். "மத்தமாம் பிணிநோய்க்கு" (தேவா. 426 : 3). 2.வெறி, களிப்பு. "மத்தக் கரியுரியோன்" (திருக்கோ. 388). 3. யானை மதம் (திருக்கோ. 388, உரை). 4. செருக்கு (உரி. நி.) 5. கோட்டி (பைத்தியம்). "மத்த மனத்தொடு மாலிவ னென்ன" (திருவாச. 5: 3). 6. கருவூமத்தை. "மத்தநன் மாமலரும் மதியும் வளர்" (தேவா. 923 : 8).
     மத்தம்-வ. மத்த.
     மத்து-மது = 1. கள், "மதுமறைந் துண்டோர் மகிழ்ச்சி போல" (தொல். பொருள். 114, ப. 495). 2. தேன். "மதுவின் குடங்களும்" (சிலப். 25:38). 3. இலுப்பைப்பூ முதலியவற்றினின்று காய்ச்சி யிறக்கும் வெறிநீர் (சங். அக.). 4. அமுதம் (சங். அக.). 5. இனிமை (அக.). 6. பராசம் (மகரந்தம்) (சங். அக.) 7.அதிமதுரம் (மலை.).
     வ. மது (madhu), OE. meodu, MLG. mede. OHG. metu, ON. mjathr, Emead, alcoholic liquor of fermented honey and water. Gk methu, wine. L mel, honey.
     மத்தம்-மத்தன். 1. மதிமயக்க மடைந்தவன். "இறந்தனர் போல வீழ்ந்த மத்தரை" (பாரத. நிரை. 102). 2. பித்தன். "மத்தனேன் பெறுமாய மலமாய" (தாயு. பொன்னை. 35.). 3. பேரூக்க முள்ளவன். "பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து" (திருவாச. 153). 4. கொழுப்புள்ளவன். "மத்தனி ராவணன் கொதித்தான்" (இராமநா. உயுத். 44).
     மத்தன் - வ. மத்த
     மத்து-மத்தி-மதி = மயக்கஞ் செய்யும் திங்கள். இப் பொருள் வடமொழியில் இல்லை.