பக்கம் எண் :

குலமும் கோவும் 157

22.   “செழியன் கூடற் கோமான் தென்னவன்
     வழுதி மீனவன் பஞ்சவன் மாறன்
     ..........................................
     குமரிச் சேர்ப்பன் கோப்பாண் டியனே”
     - பிங்கல நிகண்டு.

23, மாற்றாரை வென்று வருவதால் இவன் கூறிய வஞ்சினம் புறநானூறு 71-ஆம் பாட்டில் காணப்படும்.

24. The Chronology of the Early Tamils, p. 122, F.N.

25. இவனைச் சுந்தர பாண்டியன் என்றும், நெடுமாறன் என்றும் புராணங்கள் கூறும். நெல்லை நாட்டிலுள்ள அரிகேசரி நல்லூர் இவன் பெயரால் அமைந்தது போலும், இப்பொழுது அஃது அரிகேச நல்லூர் என வழங்கும்.

26. சின்னமனூர்ச் செப்பேடுகளில் இம்மன்னர் “கொற்றவர்கள் தொழு கழற்கால் கோவரகுண மகராசன்” என்று புகழப்பட்டுள்ளார். பட்டினத்தடிகள் திருவிடை மருதூர் மும்மணிக் கோவையில் இவருடைய சிவ பக்தியின் பெருமையைப் பாராட்டியுள்ளார். “பெரிய அன்பின் வரகுண தேவர்” என்பது அவர் வாக்கு.

27. The Pandyan Kingdom, p. 79.

28. இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ண தேவன்.
 

29. I.M.P.1175; 474 of 1909

30. The Pandyan Kingdom, p. 120 அதன் பழம் பெயர் குருவித் துறை.

31. T.A.S. Vol. I.p.90.

32. 426 of 1907. அங்குள்ள பழமையான சிவாலயம் கண்ணுடை ஈச்சரம் என்று கல்வெட்டிற் குறிக்கப்பட்டுள்ளது. அஃது இப்பொழுது கண்ணீஸ்வரர் கோயில் எனப்படும்.