முதலாகத் திருவெண்காடு ஈறாக எட்டுப்பதிகள் அப்பாட்டிலே
குறிக்கப்படுகின்றன.
திருமறைக்காடு
இக் காலத்தில் வேதாரண்யம் என வழங்கும் திருமறைக்காடு மூவர்
தேவாரப் பாடலும் பெற்ற
மூதூராகும்.
மறைவனம் என்றும், வேதவனம்
என்றும்
திருஞான சம்பந்தர் அப்பதியைக்
குறித்தருளினார்.14
நான்
மறைகளும் ஈசனை வழிபட்ட இடம் திருமறைக்காடு
என்பர்.
“சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்
மதுரம் பொழில்சூழ் மறைக்காடு”
என்னும் தேவாரத்தில் அவ்வூர்ப் பெயரின் வரலாறு விளங்குகின்றது.
தலைச்சங்காடு
காவிரி யாற்றின் மருங்கே அமைந்த தலைச்சங்காடு திருஞான சம்பந்தரால்
பாடப் பெற்றது.
அப் பதியில் கட்டுமலை
மேலுள்ள திருக்கோயிலில்
அமர்ந்த
இறைவனை,
“கூடஞ்சூழ் மண்டபமும் குலாய வாசற் கொடித் தோன்றும்
மாடஞ்சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே”
என்று அவர் பாடியுள்ளார். இப்பொழுது தலையுடையவர் கோயிற் பத்து
என்னும் பெயரால் அப்பதி
வழங்கும்.15
தலையாலங்காடு
தேவாரப் பாமாலை பெற்ற தலையாலங்காடு தென்னிந்திய வரலாற்றிலும்
பெயர் பெற்ற ஊராகும்.
அது சங்க இலக்கியங்களில் தலையாலங்கானம்
என்று
|