திரு ஆனைக்கா என்று அத் தலத்திற்குப்
பெயர் வந்ததென்பர்.9 அக
கோவிலுள்ள
திருக்கோவில்
ஜம்புகேச்சுரம் எனப்படும்.
திருக்கோலக்கா
சீகாழிக்கு அருகே திருக் கோலக்கா என்னும் சோலைப்பதி உள்ளது.
அப் பதியில் இளங்கையால்
தாளமிட்டு இனிய தமிழ்ப்பாட் டிசைத்தார்
திருஞானசம்பந்தர். இப் பாடலுக்கு இரங்கிய
ஈசன் பிள்ளைப்
பெருமானுக்குப் பொற்றாளம்
பரிசாக அளித்தார் என்றும், அன்று முதல்
கோலக்காவில்
உள்ள கோயில் திருத்தாள முடையார் கோயில் எனப் பெயர்
பெற்றதென்றும் கூறுவர்.10
ஏனையகாக்கள்
இன்னும், ஒரு நெல்லி வனத்தில் ஈசன் காட்சியளித்தமையால் திரு
நெல்லிக்கா என்னும் பெயர்
அதற்கமைந்தது. திருவிடை மருதூரின்
அருகேயுள்ள திருக்கோடிகா என்பது மற்றொரு சோலைக்கோவில்.11
வைத்தீஸ்வரன் கோவிலுக்கு ஐந்து மைல்
தூரத்திலுள்ள குரங்குக்கா என்பது
மந்திச்சோலை,
பாலைவனத்திலும் கொற்றவை என்னும் வீரத்
தெய்வத்தைச்
சோலையில் வைத்து மறவர்கள் வழிபட்டமுறை
பழைய
நூல்களிற்
குறிக்கப்டுகின்றது.12
காடுகள்
ஈசன் உறையும் காடுகளும் தேவாரப் பாடல்களால் இனிது விளங்கும்.
திருமறைக்காடு முதலிய காட்டுத்
திருப்பதிகளை ஒருபாசுரத்திலே தொகுத்துப் பாடினார்
திருநாவுக்கரசர்.13 திருமறைக்காடு |