ஜெகதீசய்யர் எழுதிய நூலிற் காண்க -Indian Shrines. p. 313 -16.
5. அந்தணரின் மேம்பட்ட அப்பூதியடிகள் திருநாவுக்கரசரைப் போற்றி
அவர் பெயரால் அறம்
புரிந்தவர். அடிகளின் மைந்தனைப் பாம்பு தீண்டிய
போது, திருநாவுக்கரசர் ஆண்டவனைப் பாடி
விஷத்தைப் போக்கிய செய்தி
தேவாரத்தால் அறியப்படும்.
6. சங்க நூல்களில் பிள்ளையாரைப்பற்றிய குறிப்பொன்றும் கிடைக்கவில்லை.
“பிடியதன்
உரு உமைகொள” என்ற தேவாரத்தில், “கணபதி வர
அருளினன்” என்று பாடியுள்ளார் திருஞான சம்பந்தர்.
7. இராமநாதபுரம் நாட்டில் திருப்பத்தூர் வட்டத்தில் உள்ளது
பிள்ளையார்பட்டி.
8. M.E.R., 1935-36.
9. “கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்....ஆறலைக்குமிடம்” என்றும்,
“முசுக்கள் போல் பல வேடர்
வாழ் முருகன் பூண்டி” என்றும் பாடினார்
சுந்தரர்.
-திருமுருகன் பூண்டிப் பதிகம் 1, 3.
10. ஏந்தும் அயில்வேல் நிலைகாட்டி
இமையோர் இகல்வெம் படைகடக்கும்
சேந்தன் அளித்த திருமறையோர்
மூதூர் செல்வச் சேய்ஞலூர்”
-என்று சேக்கிழார் கூறியருளினார். (சண்டேசுரர் புராணம், 1)
இப் பதியில் ஆறுமுகப் பெருமான் பூசனை புரிந்து ஈசனிடம்
பாசுபதாஸ்திரம் பெற்ற வரலாறு கந்த
புராண உற்பத்திக் காண்டத்தில்
விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
11. 394 of 1811.
12. உற்பத்திக் காண்டம், திருச்செந்திற் படலத்திற் காண்க.
|