பக்கம் எண் :

தேவும் தலமும்369

மன்னராக இவர் வாழ்ந்தவர் எனக் கருதலாம்.

      
“ஈண்டுநூல் கண்டான் எழில்மிழலைக் கூற்றத்துப்
       பூண்டபுகழ் பொன்பற்றி காவலனே - மூண்டவரை
       வெல்லும் படைத்தடக்கை வெற்றிபுனை வீரன்தன்
       சொல்லின் படியே தொகுத்து”24


என்னும் பாட்டால் வீரசோழன் விருப்பத்திற் கிணங்க இவர் இலக்கண நூல்
இயற்றினார் என்பது நன்கு விளங்குகின்றது. எனவே, வீரசோழன் அரசு
புரிந்த பதினொன்றாம் நூற்றாண்டின் பிற் பகுதியில் புத்த மதத்தைச் சேர்ந்த
சிற்றரசரும் இருந்ததாகத் தெரிகின்றது. தஞ்சை நாட்டு அறந்தாங்கி
வட்டத்திலுள்ள பொன் பேத்தி என்ற ஊரே புத்த மித்திரனார்க்குரிய
பொன்பற்றி எனக் கருதப்படுகின்றது.

                          
பள்ளிச் சந்தம்

       பண்டைத் தமிழரசர் சைன பௌத்தக் கோயில்களுக்கு
இறையிலியாக விட்ட நிலமும் ஊரும் பள்ளிச் சந்தம் என்று பெயர் பெற்றன.
முற் காலத்தில் சிறந்திருந்த சில பள்ளிகளின் பெயர்கள் சாசனங்களால்
அறியப்படுகின்றன. செங்கற்பட்டு நாட்டிலுள்ள ஆனந்த மங்கலத்தில்
ஜினகிரிப் பள்ளி இருந்தது.25 தென்னார்க்காட்டில் உள்ள திரு நறுங்
கொண்டையில் பெரிய பள்ளியும்,26 இராஜேந்திர புரத்தில் கங்காசூரப்
பெரும் பள்ளியும்,27 ஜனநாத புரத்தில் சேதிகுல மாணிக்கப் பெரும் பள்ளி,
கங்ககுல சுந்தரப் பெரும் பள்ளி என்னும் இரு பள்ளிகளும்,28
இன்னோரன்ன பிற பள்ளிகளும் இருந்தன என்பது கல்வெட்டுக்களால்
அறியப்படும். அத்தகைய பள்ளிகளைத் தமிழரசர் ஆதரித்த