பக்கம் எண் :

370ஊரும் பேரும்

பான்மை பள்ளிச்சந்தம் என்று பெயர் பெற்றுள்ள ஊர்களால் விளங்கும்.

         தென்னார்க்காட்டுத் திருக் கோயிலூர் வட்டத்திலுள்ள பள்ளிச்
சந்தம் என்னும் ஊர் அங்குள்ள சமணப் பள்ளியால் பெயர் பெற்றதென்பது
சாசனத்தால் விளங்குகின்றது. கண்டராதித்தப் பெரும் பள்ளி அருகே
சிறப்புற்று விளங்கிய பான்மையும், நேமிநாதர் என்பவர் அதனைப்
பரிபாலனம் செய்த முறையும் அவ்வூரிற் கண்ட சாசனம் ஒன்றால் அறியப்
படுவனவாகும்29. தஞ்சை நாட்டு நாகப்பட்டின வட்டத்தில் ஒரு பள்ளிச்
சந்தமும், இராமநாதபுரச் சிவகங்கை வட்டத்தில் மற்றொரு பள்ளிச் சந்தமும்
உள்ளன. இத்தகைய நன்கொடைகளால் தமிழ் வேந்தர் சமண சாக்கிய
மதங்களையும் வேற்றுமையின்றி ஆதரித்தனர் என்னும் உண்மை இனிது
விளங்குவதாகும்.

                  
 அடிக் குறிப்பு

1. “கன்னிநா டமணர் தம்மால் கட்டழிந் திழிந்து தங்கள்
மன்னனும் அவர்கள் மாயத் தழுந்த”
                             
- திருஞான சம்பந்தர் புராணம், 613

2. பெருந்தொகை, 183.

3. பெருந்தொகை, 1560, 2020. அழகர் மலையில் இப்பொழுது பஞ்ச பாண்டவர் படுக்கை என வழங்குவது சமண முனிவர்கள் வதிந்த இடம் போலும்.

4. S.I.I., Vol. I, pp. 28, 30

5. S.I.I., Vol. I, p. 95.

6. I bid, p. 97.

7. I bid, p. 102.

8. I bid, p. 106.

9. North Arcot Manual. Vol. II, 308.

10. Sewell's Antiquities. p. 170.