பக்கம் எண் :

372ஊரும் பேரும்

                6. தமிழகம் - அன்றும் இன்றும்

       முன்னொரு காலத்தில் இமயம் முதல் குமரிவரை தமிழ் மொழியே
பரவியிருந்த தென்பது தக்கோர் கருத்து. அப்பழம்பெருமையை நினைந்து,

         
  “சதுர்மறை ஆரியம் வருமுன்
            சகமுழுதும் நினதானால்
            முதுமொழி நீ அனாதியென

             மொழிகுவதும் வியப்பாமே”


        என்று மனோன்மணீயம் பாடிற்று. அந் நாளில் கங்கை நாட்டிலும்,
காவிரி நாட்டிலும் தாளாண்மையுடைய தமிழர் வேளாண்மை செய்தனர்; வளம்
பெருக்கினர்; அறம் வளர்த்தனர். கங்கைத் திரு நாட்டில் பயிர்த் தொழில்
செய்த வேளாளர் இன்றும் தமிழகத்தில் கங்கை குலத்தவர் என்றே
கருதப்படுகின்றார்கள். எனவே, பழங் காலத்தில் பாரத நாடு முழுவதும்
தமிழகமாகவே விளங்கிற்று.

      அந் நிலையில் ஆரியர் வந்தனர்; வட நாட்டில் குடியேறினர்.
நாளடைவில் அந் நாட்டில் ஆரியரும் தென் நாட்டில் தமிழரும் அமைந்து
வாழ்வாராயினர். ஆரியர் மொழி வடமொழி யென்றும், தமிழர் மொழி தென்
மொழி யென்றும் பெயர் பெற்றன. தென் மொழியின் வழி வந்த திராவிட
மொழிகளில் கன்னடமும் தெலுங்கும் தென்னாட்டில் தனித்தனியே வாழத்
தலைப்பட்டன. அதனால்