பக்கம் எண் :

தமிழகமும் நிலமும்45

42. “ புறவம் பறம்பணை புறவணி முல்லை, அந்நிலத் தூர்ப்பெயர் பாடி
றென்ப” -பிங்கலநிகண்டு

43. “சண்டியார்க்கு அருள்கள் செய்த தலைவர் ஆப்பாடியாரே” என்பது
திருநாவுக்கரசர் தேவாரம் - திருவாபாடிப் பதிகம், 4.

44. “ஆயர்பாடியின் அசோதைபெற் றெடுத்த பூவைப் புதுமலர் வண்ணன்
கொல்லோ” - சிலப்பதிகாரம், கொலைக்களக்காதை, 46-67.

45. வேலப்பாடி வேலூர்க் கோட்டைக்குத் தென் கிழக்கே இரண்டு மைல்
தூரத்தில் உள்ளது.

46. 221 of 1910.

47. மாட்டுக் கொட்டிலைக் குறிக்கும் தொழு என்னும் சொல் சில
ஊர்ப்பெயர்களில் அமைந்துள்ளது. மூங்கில் தொழு, வெட்டியான் தொழு
முதலிய ஊர்ப்பெயர்கள் இதற்குச்சான்றாகும்.

48. எருமை மாடுகளே தோடரது செல்வம். ஆதலால், மந்தை என்பது அவர்
வசிக்கும் ஊருக்குப் பொருத்தமான பெயராகும். இலக்கியத்தில் மன்று
என்னும் சொல் பசு மந்தையைக் குறிக்கும். அச் சொல் மந்து எனத் தோடர்
மொழியிலும், மந்தையெனப் பேச்சுத் தமிழிலும் மருவி வழங்குவதாகத்
தெரிகின்றது.

49. “வாழி யவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி ஊழி யுய்க்கும்
பேருதவி ஒழியாய் வாழி காவேரி” - சிலப்பதிகாரம், கானல் வரி, 27.

50. சிலப்பதிகாரம், புறஞ்சேரி யிறுத்த காதை, 169-170.

51. “அதோமுகம் புகாரோடு அழிவு கூடல் கழிமுகம் என்றனர்
காயலுமாகும்” - பிங்கலநிகண்டு.

52. ‘கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை’ - ஐங்குறுநூறு, 188.