பக்கம் எண் :

46ஊரும் பேரும்

53. சேதுநாடு என்பது இராமநாதபுரம் ஜில்லா.

54. 25 of 1909.

55. இவ் வாற்றுப் பெயர்களை நோக்கும்பொழுது பெண்ணை யாறும்
முற்காலத்தில் வெண்ணெயாறாக இருந்திருக்குமோ என்ற எண்ணம்
எழுகின்றது. பகர வகரங்கள் தம்முள் மயங்கும் என்பது தமிழ்
ஒலியிலக்கணத்தால் அறியப்படும். அன்றியும் பெண்ணையாற்றின்
தென்கரையிலுள்ள நல்லூர் திருவெண்ணெய் நல்லூர் என்று பெயர்
பெற்றுள்ளது.

56. “முத்தாறு வலஞ்செய்யும் முதுகுன்றமே” என்பது தேவாரம்.

57. சேயாறு, செய்யார் என மருவி வழங்குகின்றது.

58. சென்னையின் வழியாக மூன்று மைல் சென்று கடலிற் கலக்கும்
அடையாற்றின் முகத்தில் அமைந்த ஊர் அடையாறு என்னும் பெயர்
பெற்றது.

59. முக்கூடற் பள்ளு நாடகம்-51.
 

60. இப்போது கயத்தார் என வழங்கும் கயத்தாறு, கல்வெட்டில், கசத்தலாறு
 என்று குறிக்கப்படுகின்றது - 19 of 1912. கசத்தினின்று எழுந்த ஆறென்பது
அப் பெயராலும் அறியப்படும். கசத்தி லாறு என்பது கசத்த லாறு என
மருவியது போலும்.

61. ஆற்றில் எளிதாக இறங்கி ஏறுவதற்குப் படிக்கட்டு அமைந்துள்ள இடம்
இன்றும் படித்துறை என மருவியது வழங்கும்.

62. 357 of 1907.

63. பாடல் பெற்ற துறைகளைத் ‘துறையும் நெறியும்’ என்ற தலைப்பின் கீழ்க்
காண்க.

64. 486 of 1907.

65. இரு நதிகள் சேரும் இடம் கூடல் என்றும், மூன்று நதிகள் சேரும் இடம்
முக்கூடல் என்றும் வழங்கும், காவேரியும் பவானியும் கூடும் இடம் பவானி
கூடல் என்று இக்