75. “குட்டம் தாங்கல் கோட்டகம் ஏரி” - பிங்கல நிகண்டு.
76. பாண்டி நாட்டின் சில பாகங்களில் கம்மாய் என்பது குளத்தின் பெயராக
வழங்குகின்றது.
கம்வாய் என்ற சொல் சிதைந்து கம்மாய் ஆயிற் றென்பர்.
கம்மாய் என்னும் சொல்லும்
ஊர்ப் பெயர்களில் அமைந்திருக்கிறது.
பாண்டுக்கம்மாய், மூவர் கம்மாய் முதலிய ஊர்கள்
பாண்டி நாட்டில் உண்டு.
77. வட ஆர்க்காட்டில் சோழிங்கர் என்ற ஊரிலுள்ள ஏரியின் பெயர் சோழ
வாரிதி என்று
சாசனம் கூறும். 9 of 1896.
78. இன்றும் மைசூர் தேசத்தில் சிவ சமுத்திரம் என்பது ஓர் ஏரியின்
பெயராக
வழங்குகின்றது.
திருக்குற்றாலத்தில் வட அருவி விழுந்து பொங்கி
எழுகின்ற வட்டச்சுனை
‘பொங்குமா கடல்’
என்று அழைக்கப்படுகின்றது.
சோழசமுத்திரம் சாசனத்திற்
குறிக்கப்படுகின்றது. 105 of
1905.
80. M. E. R. 1922, 221.
81. “கோமுகியென்னும் கொழுநீர் இலஞ்சி” - மணிமேகலை.
82. குற்றாலக் குறவஞ்சி, 85.
83. கச்சியை சூழ்ந்த நாட்டுக்குப் பொய்கை நாடு என்ற பெயர் இருத்தலால்,
பொய்கையார்
என்று அர் சொல்லப்பட்டார் என்பாரும் உண்டு. அவர்
வரலாற்றை ‘ஆழ்வார்கள் காலநிலை’
என்ற நூலின் இரண்டாம்
அதிகாரத்திலும், தமிழ் வரலாறு 176-ஆம் பக்கத்தும்
காண்க.
84. ஊரணி யென்பது ஊருணியின் திரிபாகும். “ஊருணி நீர்நிறைந் தற்றே”
என்னும்
திருக்குறளால்
அச்சொல்லின் பழமை விளங்கும். ஊருக்கு
அணித்தாக உள்ள நீர்நிலை
ஊரணி யெனப்படும் என்றும்
கூறுவர்.
85. North Arcot Manual, Vol. II p. 384.
|