86. எழுபதடி உயரமும், நூற்றிருபதடி அகலமும் உடையது அக்குளத்தின்
கரை.
87. வான மாரியால் நிறையும் குளத்தை வானமாரிக்குளம் என்பர். அப்
பெயர் மானா மாரிக்குளம் என மருவி வழங்கும்.
88. 403 of 1907.
89. 337 of 1908; M. E. R. 1933-34.
90. 53 of 1907.
91 73 of 1908; I. M. P., p. 122.
92. பெரு நிலம் உடையாரைப் பண்ணையார் என்பர்
93. 187 of 1925.
94. சங்க இலக்கியத்தில் ஊரன் என்ற சொல் மருத நிலத் தலைவனைக்
குறிக்கும்.
‘தண்டுறை
ஊரனை’ - ஐங்குறுநூறு, 88.
95. கோழியூர் என்பது சோழ நாட்டின் பழைய தலைநகராகிய உறையூரின்
பெயர், “கோழி
உறையூர்” - பிங்கல நிகண்டு.
96. இவ்வூர் இராமநாதபுர நாட்டில் உள்ளது.
97. “பெண்ணைத்தென்பால் வெண்ணெய் நல்லூர்” - சுந்தரர் தேவாரம்.
98. “சேயடைந்த சேய்ஞலூர்” என்பது தேவாரம். சூரனோடு போர் செய்யக்
கருதி எழுந்த
முருகவேள். சிவபெருமானை வழிபட்டுச் சர்வ சங்காரப்
படைக்கலம் பெற்ற ஸ்தலம்
சேய்நல்லூர்
(சேய்ஞலூர்) என்று கந்த புராணம்
கூறும் - குமாரபுரிப் படலம், 14-15, 75-76.
99. “அருங்கடி மணம் வந்தெய்த அன்று தொட்டு என்றும் அன்பில்
வருங்குல மறையோர்
புத்தூர்
மணம் வந்த புத்தூர் ஆமால்” -
தடுத்தாட்கொண்ட புராணம், 23.
100. முத்துக்கரை - The Fishery Coast.
101. The Pandyan Kingdom,p.191. |