பக்கம் எண் :

50ஊரும் பேரும்

102. பூம்பட்டினம் - The City beautiful.

103. இதனைச் சிலப்பதிகாரம் இந்திரவிழாவூரெடுத்த காதை யிற் காண்க.

104. நாகப்பட்டினத்திற்கு வடக்கே நான்கு மைல் தூரத்தில் உள்ளது நாகூர்.

105. “கடல் நாகைக் காரோணம் கருதினானை” - திருநாவுக் கரசர் தேவாரம்.

106. “கோவீற் றிருந்து முறை புரியும் குலக்கோ மூதூர் கொடுங்கோளூர்” -
சேரமான் பெருமாள் நாயனார் புராணம், 1. மகோதைப் பட்டினத்தை
“ஆர்க்கும் கடலங்கரை மேல் மகோதை” என்று தேவாரத்தில் சுந்தரர்
பாடினார்.

107. சென்ன பட்டணத்திற்குத் தெற்கே இருபது மைல் தூரத்தில்
செங்கற்பட்டைச் சேர்ந்த கோவளம் என்ற ஊர் உள்ளது. கடலுக்குள் நீண்ட
தரைமுனை (cape)கோவளம் எனப்படும். இவ்வூர்ப் பெயர் covelong

எனச் சிதைந்து வழங்குகின்றது. M. E. R., 1934-35.

108. “களர் நிலத்துப் பிறந்த உப்பினைச் சான்றோர் விளை நிலத்து
நெல்லின் வழுமிதாக் கொள்வர்” - நாலடியார், 133.

109. சிலப்பதிகாரம், காடு காண் காதை, 60-67.

110. மதுரையில் இப்பொழுது தமிழ் வளர்க்கும் சங்கத்தை நிறுவிய
பாண்டித்துரைத் தேவர் பாலைவன நத்தத்தின் ஜமீன்தார்.

111. M. E. R. 1928-29.

112. செங்கற்பட்டுப் பொன்னேரி வட்டத்தில் உள்ளது.

113. Journal of the Madras Geographical Association, Vol. 15, pp.
322-24.