எனவே, இது நிலவரமான சட்டமாக நிறைவேற்றப்படாமல், தற்காலிகத் தேர்வுமுறையாக ஒராண்டளவுக்கு மட்டும் செல்லுபடியாகும்படி நிறைவேற்றப்பட்டது. ஆண்டுதோறம் இதே வகையில் இது நெடுநாள் புதுப்பிக்கப்பட்டு வந்து இன்னும் அப்படியே வழக்கப்படி புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அரசியல் முறையில் சட்ட மேற்படுத்தாமலேயே எல்லாரும் ஏற்று நடத்தும் நடைமுறைகள் பல ஆங்கில அரசியல் அமைப்பில் வழக்கங்களாகவும் சடங்குகளாகவும் அமைந்துள்ளன. இவற்றை எழுதாச் சட்டங்கள் என்று புனைந்துரைப்பதுண்டு. ஆண்டுதோறும் இச்சட்டம் புதுப்பிக்கப்படுவதும் அத்தகைய ஒரு நடைமுறைச் சடங்காய்விட்டது. அரசியலமைப்புச் சீர்திருத்தத்தில் அடுத்தபடி 1884-ல் நிறைவேறிய மக்கள் பெயராண்மைச் சட்டமும் (Representation of the People Act) 1885-ல் நிறைவேறிய தேர்தல் தொகுதி ஒழுங்குச் சட்டமும் (Redistribution of Seats Act) ஆகும். இவற்றுள் முதலது, 1867-ம் ஆண்டுச் சட்டம், நகர்த்தொகுதியில் வீடுடையவர்க்கு அளித்த அதே பரந்த உரிமையை மாவட்டத்துக்கும் அளித்தது. அதுபோலவே பின்னதாகிய 1885-ம் ஆண்டுச் சீர்திருத்தச் சட்டம் 1867-ல் நகர்த்தொகுதியில் தொழிலாளர் பெற்ற உரிமையை நாட்டுப் புறத்துத் தொழிலாளரும் அமையும்படி செய்தது. நில உடைமை வீட்டு உடைமைகள் அற்ற பிறவகைப் பணியாளர்களுக்கும் இதன் மூலம் மொழியுரிமை கிடைத்தது. அஃதொடு அரசியல் மன்றத்தின் ஒவ்வோர் உறுப்பினர்க்கான தொகுதிக்கும் மொழி தரும் மக்கள்தொகை விழுக்காடு ஒரே நிலையாக இச்சட்டத் |