தால்தான் முதல் முதல் ஒழுங்கு படுத்தப்பட்டது. இங்ஙனமாகப் பத்திரக்காரர் கோரிக்கைகளுள் மற்றொன்று நிறைவேற்றப் பெற்றது. அரசியல் மன்றின் உறுப்பினர் தொகை இப்போது 658-லிருந்து 670 ஆக உயர்ந்தது. தேர்தல் தொகுதிகள் ஒரு நிலைப்படுத்தப் பட்டதுமுதல் உறுப்பினர்கள் அவ்வத் தொகுதிக்கே பெயராட்கள் ஆவர் என்ற கருத்துப் படிப்படியாக மாறுதலடைந்து அவர்கள் நாட்டின் பெயராட்களே என்ற கருத்து முதிர்வுற்றது. உண்மையில் 18-ம் நூற்றாண்டிலிருந்தே பர்க் என்ற அறிஞர் இதனை வலியுறுத்தியிருந்த போதிலும், இது நடைமுறையில் நன்கு வரவேற்கப்பட்டது 1885-ம் ஆண்டுச் சட்டத்தின் பின்னரேயாகும். அரசியல் மன்றிலுள்ள இரண்டு அவைகளுள் கீழவை பொதுமக்கள் அவை என்று நெடுநாள் வழங்கினாலும், உண்மையில் அது பெருமக்கள் என்ற மரபுரிமைப்பட்டம் பெறாத பெருநிலக்கிழவர், செல்வர், ஆகியவர்கள் தலைமை உரிமைபெற்ற அவையாகவே 1832 வரை யிருந்துவந்தது. 18-ம் நூற்றாண்டு இறுதியில் ஏற்பட்ட கைத்தொழிற் புரட்சியாலும், பிரிட்டனின் பேரரசும் வாணிகமும் வளர்ச்சியடைந்ததனாலும் வணிக மக்களும், இடைத்தர வகுப்பினரும் தொழிலாளரும் வளர்ச்சியடைந்தனர். இவ்வளர்ச்சி கீழவையின் தன்மையில் பெருமாறுதலை உண்டுபண்ணி அதை வரவர உண்மையாகவே பொது அவையாக்கி வந்தது. நாட்டு மக்கள் வாழ்வுதாழ்வு, வளர்ச்சி, கருத்து வேற்றுமை ஆகிய வாழ்க்கைச் செய்திகள் அனைத்தையும் இப்பொது அவை கண்ணாடிபோல் எடுத்துக்காட்டி அதற்குரிய |