பக்கம் எண் :

குடியாட்சி11

தலைவன் கீழ் அடங்கியபோது அக்குழு ஒருகுலம் என்னப்பட்டது. குலத்தின் தலைவன் குலபதியானான். இவன் தலைமை நிலையும் உரிமைகளும் குடும்பத்தலைவன் நிலையும் உரிமையும் போன்றவையே. ஆயினும் அவன் கீழடங்கிய மக்கள்தொகை விரிவடைந்ததனால் அவன்நிலை கிட்டத் தட்ட ஒர் அரசன் நிலையாயிற்று. நாடோடி வாழ்வு நீத்து ஆரியர் சிந்து கங்கைக் கரைகளில் நிலைபெற்ற குடியினரானபோது இக்குலத்தவர் தங்கிய இடங்களே சிறு நாடுகளாயின. குலபதிகளே அரசராக மாறுதலடைந்தனர்.

   இந்தியப் பண்டைய ஆரிய மொழியாகிய வேதமொழி இக்குடியேற்ற நாட்களிலேயே ஒரளவு இலக்கிய இலக்கண அமைதிபெற்றது. எனவே அம்மொழியில் அரசனைக் குறிக்கும் சொற்கள் இந்நிலையை நன்கு உணர்த்துகின்றன. நாடோடி வாழ்க்கைக் காலத்தில் மக்கள் முல்லை நில மக்களாகவே இருந்தனராதலால் அவர்கள் செல்வம் பெரும்பாலும் ஆடுமாடுகளாகவே இருந்தன. எனவே அவற்றிற்குரிய தலைவனான அரசன் பெயர்களுள் ஒன்று இடையர் என்று பொருள் கொள்ளும் ‘கோபன்’ என்ற சொல்லாகவே அமைந்தது. குலம் ராஜ் என்றும் ராஷ்ட்ரம் என்றும் அழைக்கப் பட்டதற்கிணங்க, அரசனும் ராஜன்’ ராஷ்ட்ரபதி அல்லது குலபதியாயினன். இவற்றுள் முதல் சொல் நாளடைவில் பழம்பொருளிழந்து அரசு நிலையைக் குறிப்பினும் பின்னிரண்டு சொற்களும் முன்னையநிலையை நினைவூட்டுபவையாகவே அமைந்துள்ளன. மேனாடு சென்ற ஆரியரிடையேயும் கிட்டத்தட்ட இதேநிலைமையை ஒட்டி இதேசொற்கள் நிலவின. குடும்பம் பாமிலியாஸ் (families) என்றும், குடும்பத்தலைவரான தந்தை பத்ரியாஸ்