(patrias) என்றும் கோத்திரம் கேன்ஸ் (gens) என்றும் குரலம் ட்ரிபாஸ் (tribos) என்றும் வழங்கப்பட்டன. பணத்தைக் குறிக்கும் சொல் இலத்தீன் மொழியில் பசு என்ற பொருளுடைய பெகு (Pecu) என்பதேயாகும். இதுவே இன்றும் ஆங்கிலத்தில் சம்பளம் என்பதற்கான ஃபீ (fee) என்ற சொல்லின் மூலமாகும். குடியமைதி பெற்றகுலங்கள் முதலில் சிறுகுடியேற்றங்கள் அல்லது நாடுகளாகவேயமைந்தன. சிந்து ஆறு கடந்து ஆரியர் கங்கையாற்றுப்பக்கம் குடியேறத் தொடங்கிய காலத்திலேயே முதற் குடியிருப்பும் ஏற்பட்டது. இதனால் நமக்குத் தெரியவரும் முதல் நாட்டு மக்களும் குலத்தினரும் சட்லஜ் ஆற்றுக்கும் யமுனையாற்றுக்கும் இடையில் குடியேறிய குருக்களும் பாஞ்சாலருமேயாவர். அதன்பின் கங்கைக்கரையில் ஏற்பட்ட குடியேற்றத்தார்களுள் முந்தியவர்கள் சரபு ஆற்றுக் கரையிலுள்ள கோசலரும் அதற்குக் கிழக்கிலும் தெற்கிலும் பரந்த விதேகரும் ஆவர். கி. மு. ஆறாம் நூற்றாண்டில் குப்தர் தோன்றினர். இவர்களுள் யமுனைக்கரையில் உள்ள பாஞ்சாலரும் கீழ்க்கோடியிலுள்ள கோசலரும் விதேகரும் பின்னாளைய குப்தரும் தனி ஆரியராயிராமல் முன்னைய குடிகளுடன் கலப்புற்ற இனத்தவர் என்று எண்ண இடமுண்டு. யமுனைக்கரையில் தெற்கிலமைந்த விருஷணிகள் இன்னும் பெரும்பான்மையாகப் பழங்குடித் தொடர்புள்ளவராயிருந்திருக்கக் கூடும். விருஷணிகளில் சிறத் அரசனாயிருந்த எண்ணன் கருநிறமுடையவன் என்றும் ஆயர்குலத்தில் வளர்ந்தவன் என்றும் குறிக்கப்படுவதும், வேதங்களுக்கும் புறம்பாக வேதங்களுடன் ஒட்டிவளர்ச்சியுற்ற பிற்கால ஆன்மீகக் கோட் |