பக்கம் எண் :

குடியாட்சி13

பாடுகளை வகுத்தவன் என்றும் குறிப்பிடப் படுதல் இதற்கு ஆதரவு தருவதாகும். பாஞ்சாலரிடையே பிறந்த துரோபதையும் கோசலரிடையே பிறந்த இராமனும் இஃதேபோல் கருநிறமுடையவராகக் குறிக்கப்பட்டிருக்கின்றனர். விதேகரிடையேயும் சனகர் ஆன்மிகநெறியருளிய தலைவராவார்.

   மேற்கூறியவற்றால் ஆரியரிடை முதன்முதல் ஏற்பட்ட அரசர்கள் பழயகுலபதிகளே என்று கண்டோம். அவர்கள் போரில் தம் குலத்தவர் அல்லது நாட்டினரின் படைத் தலைவராகவும், வழக்குகளில் வழக்குத் தலைவராகவும், குலவழக்கங்களாகிய எழுதாச் சட்டங்களைக் கையாண்டு தீர்ப்பு உரைப்பவராகவும், சமயவினைகளில் சமயத் தலைவராகவும் இருந்தனர்.

   இந்தியாவிற்கு வந்த ஆரியரைப் போலவே மேற்கு நாடுகளில் சென்ற ஆரியரும் பலபல சிறுநாடுகளை அமைத்தனர். அவை தமக்குள்ளும் முற்குடிகளுடனும் போரிட்ட காலத்தில் ஒன்றை ஒன்று வென்று விழுங்கிப் படிப்படியாக விரிவுற்றுப் பெருநாடுகளாயின. கிரிஸில் இவை பல ஊர்கள் சூழ்ந்த சிறு நகரங்களாக அமைந்து அலக்சான்டர் காலம் (கி. மு. 327) வரை அதே நிலைமையில் இருந்தன. இத்தாலியில் பல சிறு நாடுகளிடையேயும் வலிமை மிக்கதான ரோம் என்ற ஆரிய நகரத்தினர் தம்மைச் சூழ்ந்த ஆரியக்கலப் பினத்தவரான லாட்டியரை வென்று பின் பெரும்பான்மை ஆரியரல்லாதாரான இத்தாலியரையும் அடக்கி ஆண்டனர். கி. மு. முதல் நூற்றுாண்டு முதல் கி. பி. நாலாம் நூற்றாண்டுவரை இவ்வரசு பிறநாடுகளையும் அடக்கிப் பிரிட்டன் முதல் மேல் ஆசியாவரை செர்மனி