பக்கம் எண் :

14குடியாட்சி

முதல் வட ஆபிரிக்காவரைப் பரந்த ஒரு பேரரசை நிறுவிற்று.

   செர்மனியில் இச்சிறுநாடுகள் கிட்டத் தட்டக் குல நிலையிலேயே 19-ம் நூற்றாண்டளவும் தொடர்ந்து நிலவின. பிரான்சிலும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் அரசர் ஆட்சிக்கு இச்சிறுநாடுகள் உட்படினும் தம் உரிமை முற்றும் கைவிடாமல் 18-ம் நூற்றாண்டளவும் தொடர்ந்திருந்தன. பிரிட்டனில் தென்பகுதியில் குடியேறிய இவ்வாரிய இனத்தார் பல சிறு நாடுகளை அமைத்தனர். அவை படிப்படியாக ஏழாகி மூன்றாகி அவ்வப்போது ஒவ்வொன்று முதன்மையுற்று நிலையடைந்தன. 8-ம் நூற்றாண்டில் இங்கிலாந்து ஒரே நாடாயிற்று. 

   ஆரியருடைய நாகரிகம், அவர்கள் அரசியல் தோற்றம் ஆகியவற்றை இங்ஙனம் முதன் முதலாக எடுத்துக் கொண்டதன் காரணம், அவை காலத்தால் முந்தியவை என்பதன்று. உண்மையில் மனித நாகரிகத்தின் வரலாற்றில் ஆரியர் வரவு மிகவும் பிற்பட்டதுதான். ஆனால் அவர்கள் அரசியலிலும் நாகரிகத்திலும் மூன்று சிறப்புக்கள் காணலாம். ஒன்று பிற்கால அரசியல் வளர்ச்சிகள் யாவும் ஆரியர் வாழ்க்கை நிலையினின்றே தோன்றியவை. இரண்டாவது, ஆரியரைப் பற்றிய செய்திகள் பிற்பட்டன வாதலால் வரலாற்றுக்கு எட்டிய செய்திகளாயிருக்கின்றன ; அவர்கள் வரவு வரலாற்றுக் காலத்துக்கு அண்மையிலுள்ளது. மூள்றாவது காரணம் காலத்தால் அவர்கள் நாகரிகம் பிற்பட்டதாயினும் வரலாற்றுக்காலத் தொடக்கத்தில் அவர்கள் இருந்த நிலைமை அவர்கட்கு முன்னைய நாகரிகங்கள் பல்லாயிர ஆண்டுக