ளுக்கு முன்னமே கடந்துவிட்ட முல்லைநில நாகரிகப்படியாகும். எனவே பதினாயிரக் கணக்கான ஆண்டுகட்கு முன் ஆரியரல்லாதார் அடைந்துவிட்ட முல்லைநில நாகரிகப் படிகளைப்பற்றி மிகவும் அறியக்கூடாத நிலையில் இருக்கிறோம். ஆரியர் நாலாயிரம், மூவாயிரம் ஆண்டுகட்கு முன் இருந்த நிலை அப் பிறமக்கள் பதினாயிரக் கணக்கான ஆண்டு கட்குமுன் இருந்த நிலைமையை உய்த்துணர வழி செய்யும். ஆரிய வரலாற்றாசிரியர் தொடக்கத்தில் தங்கள் நாகரிகமே நாகரிகமெனக்கொண்டு அது தோன்றிய காலமே உலக நாகரிகம் தோன்றியகாலம் என எண்ணினர். 4000 ஆண்டுகட்குமுன், அஃதாவது கி. மு. 2000-ல் ஆரியர் முல்லை நிலநாகரிக நிலையிலிருந்ததால் உலகமே முல்லைநில நாகரிகத்தில் தானிருந்திருக்கவேண்டும் என்று மனக்கோட்டை கட்டியிருந்தனர். இத்தகைய ஆசிரியர் கிரேக்க முதல் இலக்கிய நூல்களாகிய இலியத் ஒடிஸ்ஸி என்பவற்றின் காலமாகிய கி. மு. 1000 அல்லது கி. மு. 800 தான் மிகப் பழைய காலமென்றோ, அல்லது இந்திய ஆரியரது இருக்குவேத காலமாகிய கி. மு. 1500-1200 தான் மிகப்பழைய காலமேன்றோ கொண்டதுடன் அதற்கு முன்னைய காலம் அதனினும் நாகரிகக் குறைவான காலமென்று கருதினர். ஆனால் கிரேக்க நாட்டிலும் கிரீட்டிலும் கண்டெடுக்கப்பட்ட முசீனிய கிரேட்ட நாகரிகங்கள் ஆரியர் வரவுக்கு முற்பட்டன என்பதும், அவை ஆரியர் வரவுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்னரே அவர்களை விடப் பன்மடங்கு உயரிய நாகரிகநிலை எய்தியிருந்தன என்பதும் புதை பொருளாராய்ச்சியரால் விளங்கின. முசீனியர் |