பக்கம் எண் :

16குடியாட்சி

நாகரிகம் கி. மு. 2000 முதல் 1000 வரை நிலவியது என்றும், கிரேட்ட நாகரிகம் கி. மு. 3000 முதல் 2000 வரை நிலவியது என்றும் கருதப்படுகிறது. இவற்றுடன் உறவுடைய எகிப்திய நாகரிகம் கி. மு. 3000 முதற்கொண்டு தொடர்ந்த வளர்ச்சியுடையதாயிருந்தது. பாபிலோனியரும் மேலை ஆசியரும் கி. மு. 2000 முதல் கி. மு. 800 வரைப் பேரரசு நிலை எய்தியிருந்தனர். அசீரியர் கி. மு. 4000 முதற்கொண்டே மிக உயரிய நிலையிலிருந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவில் சிந்து ஆற்றின் தென்பகுதியில் மொகெஞ்சதரோ, அரப்பா ஆகிய இடங்களில் செய்யப்பட்ட நில அகழ்வாராய்ச்சியால் கி. மு. 5000 வரை எட்டக் கூடியதும் இவற்றுடனொத்த, ஆனால் இவற்றிலும் பழமையும் உயர்வும் மிக் ஒரு நாகரிக வாழ்வு அவ்விடங்களில் இருந்ததென்று தெரியவருகிறது. இத்தாலியர் ரோமர் வரலாறு தொடங்கு முன்பாகவே டஸ்கனி என்ற இடத்திலுள்ள எட்ரஸ்கானியர் என்ற மக்கள் மாடமாளிகைகள் கூடகோபுரங்கள் கட்டியிருந்தனர். இன்னும் ஆரியரல்லாதாருள் ஒரு பிரிவினரான பினிசியரும் கார்த்தகினியரும் நாவாய்களில் கடல்கள் கடந்து உலகெங்கும் கி. மு. 1000த்திலேயே வாணிகம் நடாத்தினர். மேலை ஆசியாவிலும் எகிப்திலும் கிட்டும் சான்றுகளால் கி. மு. 1000க்கு முற்பட்டே தமிழ்நாட்டு வாணிகர் கடல்கடந்து அந்நாடுகளில் தேக்கு, சந்தனம், பருத்தியாடை, மயிலிறகு, னிளகு முதலியவைகளைக் கொண்டுபோய் விற்றனர் என்று தெரியவருகிறது. 

   இவ்வாணிபத்தின் அறிகுறியாகத் தோகை (மயில்) அகில், தேக்கு, அரிசி முதலிய தமிழ்ச்சொற்கள் பண்டைய எபிரேய கிரேக்க மொழிகளில் சென்று இடம்