பக்கம் எண் :

குடியாட்சி17

பெற்றன. இங்ஙனம் கிரேட்ட மொழியில் இடம்பெற்ற அரிசி (ஒரிஸா) என்ற சொல்லே பலமொழி வாயிலாகவும் திரிபுற்று ஆங்கிலமொழியில் ‘ரைஸ்’ என்ற உருவுடன் இன்று வழங்குகிறது.

   பழைய உலகு என்று கூறப்படும் ஆசியா ஐரோப்பா ஆபிரிக்கா என்பவற்றின் எல்லைகடந்து சென்றாலும் பல பழைய நாகரிகங்கள் காணப்படுகின்றன. ஆபிரிக்காவிலுள்ள அபிசீனிய நாகரிகம் கிரேக்கர் காலத்திலேயே மிகப் பழமையுடையதென்று கருதப்பட்டது. அமெரிக்காவில் ஐரோப்பியர் குடியேறியபோது பெருவிய நாகரிகமும் மயநாகரிகமும் மிக உயர்நிலையிலிருந்தனவாம். இவையிரண்டும் இந்திய நாகரிகக் கூறுகளுடன் சிறப்பாகத் தென்னிந்திய நாகரிகக் கூறுகளுடன் மிகமிகப் பொருத்தமுடையவை என்று கூறப்படுகிறது.

   இவ்வாரியல்லா நாகரிகவகைகள் எல்லாமே ஆரிய நாகரிகத்தைவிட மிகவும் மேம்பட்டவையாயிருந்தும் எக் காரணங்களாலோ ஆரியர் தாக்கினால் பலவகையிலும் அழிந்தும் சிதைத்தும் போயின. இன்று அவற்றுள் அழியாமல் மீந்து நின்று நிலவும் ஆரியமல்லாத நாகரிகம் தென் இந்தியாவில், சிறப்பாகத் தமிழ்நாட்டில் நிலைபெற்று விளங்கும் திராவிட நாகரிகம் மட்டும்தான்.

   திராவிடரின் பழைய தாய்மொழியின் கால்வ்ழியில் வந்த மிகப் பழமைவாய்ந்த மொழியாகிய தமிழும் திராவிட நாகரிகமும் உலகில் பல பகுதிகளிலுள்ள மொழிகளுடனும் நாகரிகங்களுடனும் பல்வேறு வகையில் தொடர்பு உடையவையென்று காணப்படுகிறது. ஆயினும் திராவிட இனம் எவ்வினத்துடன் நேரடியான