பக்கம் எண் :

குடியாட்சி163

நோக்கத்துடன் செல்வரும் படித்த வகுப்பினரும் இந்திய நாட்டுரிமைக் கழகம் (Indian National Congress) ஒன்று ஏற்படுத்தினர். இவ்வாண்டு முதல் பெரும்பாலும் ஆண்டுதோறும் அது கூடி மக்கள் நிலைகளைப்பற்றி ஆராய்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றிற்று.

   1892-ல் எல்சின் பெருமகனார் முதல் தலைவராயிருக்கையில் இந்திய சட்டமன்றத்தில் பணியாளரல்லாத உறுப்பினர் தொகை கூடுதலாக்கப்பட்டதுடன் வரவுசெலவுத் திட்டம்பற்றி ஆராயவும் இடைக்கேள்விகள் கேட்கவும் உரிமைகள் தரப்பட்டன.

   பிரிட்டிஷ் ஆட்சியிலமைந்த மன்னர் ஆட்பேர்களுள் திறமை காரணமாகப் பிரிட்டிஷார் போற்றுதலையும் வெறித்த வல்லாட்சி காரணமாக இந்தியமக்கள் வெறுப்பையும் ஒருங்கே அடைந்தவர் கர்சன் பெருமகனார். இவர் செய்த சீர்திருத்தங்களுள் ஒன்று 1905-ம் ஆண்டில் நடைபெற்ற வங்காளப்பிரிவினை. வங்காளம் ஒரேமாகாணமாக ஆட்சிசெய்யப்பட முடியாத படி அவ்வளவு பெரிதானதால் இப்பிரிவினை வேண்டப்பட்டது என அவர் கூறினார். ஆனால் மொழி, பழக்கவழக்கங்கள், நாட்டுப் பற்று ஆகியவற்றால் கிட்டத்தட்ட ஒருநாடாய் இணைந்து நின்ற வங்கத்தின் மக்கள் இதனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர் 1911ல் இதுபோன்ற இன்னொரு மாறுதல் ஏற்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்டதுமுதல் கல்கத்தா பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகரமாயிருந்தது. இப்போது தலைநகரம் தில்லியாக மாற்றப்பட்டது. ஆட்சி ஒழுங்கிற்காக வென்று செய்யப்பட்ட இவ்விரண்டு மாறுதல்களும் இந்து முஸ்லிம் வேற்றுமைக்கு விதையாய் அமைந்தன.