பட்டன. இவற்றாலும் அவ்வப்போது ஏற்பட்ட அரசியல் சீர்திருத்தங்களாலும் பட்டம் பதவிகளாலும் படித்த இந்தியர் மனமமைந்திருந்தனர். 1861-ல் இந்திய அரசியல் மன்றச் சட்டம் பிரிட்டனில் நிறைவேறிற்று. இதன் மூலம் தேர்தலுரிமை ஏற்படவில்லையாயினும் இந்திய சட்ட மன்றத்தில் அரசியல் பணியாளரல்லாதவாக்ளும் உறுப்பினர் ஆக அமர்த்தப்பட்டனர். மாகாணங்களிலும், சென்னை பம்பாய் ஆகியவற்றில் சட்டமன்றங்கள் ஏற்பட்டன. படிப்படியாக வங்காளத்திலும் பிற மாகாணங்களிலும் சட்டமன்றங்கள் உண்டாயின. 1773-ம் ஆண்டு ஒழுங்குமுறைச் சட்டப்படி ஏற்பட்ட கல்கத்தா உயர்நிலை வழக்கு மன்றம் அகற்றப்பட்டுச் சென்னை, வங்காளம், பம்பாய் ஆகிய மாகாணங்களில் தனித்தனி தலைமை வழக்கு மன்றங்கள் அமைக்கப்பட்டன. இவை கடந்த மேல் வழக்குகள் பிரிட்டனின் மன்னரவை (Privy Council) க்கு அனுப்பப்பட்டன. 1880 முதல் 1884 வரை மன்னர் ஆட்பெயராயிருந்த ரிப்பன் பெருமகனார் ஆங்கில உயர்நிலைக் கல்விக்கான பல்கலைக் கழகங்கள், நாட்டாண்மை அரசியல் நிலையங்கள் (Local Self Government) ஆகியவைகளை ஏற்படுத்தினார். அத்துடன் தாய்மொழிச் செய்தித் தாள்களுக்கிருந்த கட்டுப்பாட்டை அவர் அகற்றினார். தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் சில சீர்திருத்தங்களைத் தொடங்கினார். இந்தியப் பெருநிலப் பரப்பின் உயர்நிலை வகுப்பார் இச்சீர்திருத்தங்களால் மிகவும் நன்மையடைந்தனர். ரிப்பனை அடுத்து முதல் தலைவரான டப்பரின் பெருமகனார் (1884-1888) காலத்தில் அரசியல் சீர்திருத்தம் ஏற்படும் வரையில் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும் |