பக்கம் எண் :

குடியாட்சி165

இந்தியருக்கு மிகுதியான அரசியல் உரிமை தருவதாகப் போர்க்காலத்தில் உறுதிமொழி தரப்பட்டது. ஆனால் போர் முடிவில் நிலைமை மிகவும் மாற்றம் அடைந்தது. இந்திய நாட்டுரிமைக் கழகத்தில் மீட்டும் பிளவு ஏற்பட்டு விடுதலை ஆர்வத்தில் முனைப்புடைய கட்சி மறுபடியும் நடுநிலையாளரை விலக்கி யெழுச்சிபெற்றது. சமய ஆர்வமிக்க முஸ்லிம்கள் உலகில் ஒரே இஸ்லாமியப் பேரரசாயிருந்த துருக்கி தோல்வியுற்று வீழ்ச்சியடைந்ததால் சீற்றங்கொண்டனர். நாட்டுரிமைக் கழகத்தில் காந்தியார் தலைமையில் எழுந்த முனப்புக்கட்சி இச்சீற்றத்தைப் பயன்படுத்தி நாட்டில் ஒத்துழையாமைக் கனலை மூட்டிற்று. கிளர்ச்சி வேகத்துக் கிணங்க அடக்குமுறை வேகமும் எழுந்தது. இக்குழப்பநிலையில் 1919-ம் ஆண்டு மீண்டும் ஒரு சீர்திருத்தம் வழங்கப்பட்டது. இதுவே மாண்டேகு-செம்ஸ்போர்டுச் சட்டம் (Montague-Chelmsford Reforms) ஆகும்.

   ஒத்துழையாமை இயக்கத்தார் இச் சீர்திருத்தம் பிற்போக்கானது என்று கூறி எதிர்த்தனர். இதற்கிடையில் சென்னையில் உயர்குடியினரே ஆங்கில ஆட்சியுடன் முற்றிலும் தழுவிப் பணிகளையும் அரசியலுரிமைகளையும் முற்றிலும் கைக்கொள்வதை எதிர்த்துத் திராவிடரிடையே செல்வரும் படித்தவர்களும் சேர்ந்து நேர்மைக்கட்சி (Justice Party) ஒன்றமைத்தனர். இவர்களுடன் வட நாட்டிலும் அரசியலில் நாட்டுரிமைக் கழகத்திலிருந்து ஒதுங்கிநின்ற சிலர் நடுநிலைக்கட்சி அமைத்து மாண்டேகுச் செம்ஸ்போர்டுச் சீர்திருத்தத்தை ஏற்று நடத்த முன்வந்தனர். சில ஆண்டுகளுக்குள் நாட்டுரி