மைக் கட்சியிலும் தன்னாட்சிக்கட்சி (Swaraj Party) என்ற ஒர் உட்பிரிவு ஏற்பட்டுச் சட்டமன்றில் புகுந்து பணியேற்றது. ஒத்துழையாமைக் காலத்துக்குப் பின் தென்நாட்டைப்போல் வடநாட்டிலும் நாட்டுரிமைக் கட்சிக்கு எதிர்ப்புத் தோன்றிற்று. இந்தியக் கட்சிகள் மற்ற நாட்டுக்கட்சிகளைப்போல் அரசியல் கட்சிகள் அல்ல. வகுப்புக்கட்சிகளே என்பதைத் தென்நாடு அறிய முற்பட்டதுபோல் வடநாடும் அறியத்தொடங்கிற்று. தென்நாட்டில் நாட்டுரிமைக்கட்சியைத் தம்வயப் படுத்தியவர்கள் ஆரியச்சார்பாளரான பார்ப்பனரும் அவர்கள் துணையால் ஏழைமக்களைச் சுரண்டிய செல்வருட் சிலருமே. பிறசெல்வர் பொதுமக்கள் துணைவராய் அவர்களை எதிர்க்க முற்பட்டனர். வடநாட்டிலே ஆரியச் சார்பாளர் இந்துக்கள் என்று தம்மைக்கூறிய அனைவரையும் ஒன்றுபடுத்தித் தம்வயமாக்கினர். துருக்கிப் பேரரசுவீழ்ச்சியால் சீற்றங்கொண்டிருந்த மக்களையும், அவர்கள், தம்முடன் சிலகாலம் சேர்த்துக்கொள்ள முடிந்தது. ஆனால் முஸ்லிம்களிடையே தலைமைவகித்த அறிஞர்கள் நாட்டார்வத்தின் பெயரால் பிற இனத்தவர் தம் இனநலம் பேணுகின்றனர் என்று கண்டு முஸ்லிம் இனத்தின் உரிமைகளைப் பாதுகாக்க முஸ்லிம் குழாம் (Mualim League) ஒன்று அமைத்தனர். இந்தியர் என்ற பெயரில் ஆரிய உயர்வை நிலைநாட்டவே நாட்டுரிமைக் கழகம் பாடுபடுவதுகண்ட முஸ்லிம் குழாத்தின் தலைவர் நாளடைவில் தம் இனம் தனி நாட்டுமக்கள் கொண்டது (Separate Nation) என்பதை உணர்ந்து தனி நாடு வகுக்கும் முயற்சியை மேற்கொண்டார். தென்நாட்டு நேர்மைக்கட்சியைப் போலவே இவர்களும் தனித்தேர்தல் தொகுதி, ஒதுக்கப்பட்ட மொழித் |