பக்கம் எண் :

குடியாட்சி191

கிற்குச் சமயங்களனைத்தையும் கலை, வாணிக, நாகரிக வாழ்வுகளையும் அரசியல் கருநிலைக் கருத்துக்களையும் அறிவியல் தொடக்கத்தையும் தந்த இனம் என்று ஏற்படக்கூடும்.

  இவ்வினத்தினர் வாழ்வின் பயன் இன்று ஆரியரிடையேயும் காணப்படுகின்றதாயினும், அவர்கள் அமைத்த பேரரசுகள், பெருவாழ்வுகள் ஆகியவை பண்டை வரலாற்றுக்கதைகளாய் விட்டன. சொல்லப்போனால் வரலாற்றால் கூட இன்னும் முழுதும் விளக்கப்பட முடியாத பழங்கதையாய்விட்டன. அவர்கள் ஏற்படுத்திய எகிப்திய, சால்டிய அசிரிய, யூத அரசுகளும் பேரரசுகளும் நாகரிகங்களும் இன்று அழிந்தொழிந்தன. இன்றளவும் பெயரளவிலேனும் நின்று நிலவும் நாகரிகம் திராவிட நாகரிகமும் அதன் முடிமணியாகத் திகழும் தமிழ் நாகரிகமுமே யாகும். அது இன்றும் நின்று நிலவுவது மட்டுமின்றி இன்றும் உயிர்ப்புடையதாக விளங்குகிறது. ஆரியரில்லாதாரது பண்டைய ஊழிக்கும் ஆரிய ஊழிக்கும் இடையே ஐரோப்பிய நாடான பிரிட்டன் அரசியல் வகையில் பாலமாகவும், ஆரிய ஊழியினின்று புது ஊழிக்கு வர உருசியப் பெருநாடு பாலமாகவும் அமைந்ததுபோல, வருங்காலப் புதிய பேருலகுக்குத் தமிழ்நாடு பாலமாயமையுமென்று நம்பலாமன்றோ? 

  தனிமொழி, தனிச்சமயம், தனிப்பண்பு, தனிவாழ்க்கைநலங்கள் ஆகியவற்றால் ஒருநிலைப்பட்ட சிறு நாடாகிய பிரிட்டனை முன்மாதிரியாகக் கொண்டே பழைய நாட்டுரிமைக் கழகக்கட்சி இந்தியப் பெருநிலப் பரப்புக்குப் புதிய குடியாட்சி முறையையும் விடுதலையையும் வேண்டிகின்றது. விடுதலை இயக்கம் வளருந்தோறும் பிரிட்டனின்