விட்டாலும், ஆடுமாடுகளுக்குப் புல் குறைந்தாலும் அவர்கள் குடி கிளம்ப வேண்டியதுதான். இக்காலத்தில் பல திறப்பட்ட மக்கள் இங்ஙனம் இடம் விட்டு இடம் பெயர்ந்து திரிந்து நாடோடிகளேயாவர். உலகப் படத்தை எடுத்துப் பார்த்தால் இமயமலைக்கு நேராகக் கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து மேற்கே பஸிபிக்மாகடல்வரை ஒரு பெருமலைத் தொடர் சங்கிலிபோல் செல்வதைக் காணலாம். உலக வரலாற்றில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இம்மலைத் தொடர் இருந்த விடத்தில் ஒரு பெருமாகடல் இருந்து உலகின் வட பகுதியையும் தென்பகுதியையும் இருவேறுமா பெருங் கண்டமாகப்பிரித்தது எனப்பழய நில வரலாற்றாசிரியர் கூறுகின்றனர். இவ்விரு பெருங் கண்டங்களும் நெருங்கிக் கடல் தூர்ந்தபின் அவற்றன் நெருக்குதலால் ஏற்பட்ட நிலமடிப்புகள் இப்பெரு மலைத் தொடர்கள் என்பர். இம்மலைத் தொடர்களின் தெற்கில் பல நாட்டு மக்கள் முல்லை நில நாகரிகத்தை ஒழித்து நாடு நகரம், பட்டினம் ஊர் ஆகியவற்றை அமைத்து உழவு, வாணிகம், நிலச் செலவு, கடற் செலவு ஆகியவற்றில் மேம்பட்டு ஆயிரக் கணக்கான ஆண்டுகள் வாழ்ந்த பின்னும், அம்மலைத் தொடருக்கு வடகிழக்கிலுள்ள மக்கள் முல்லை நில நாகரிகத்திலேயே நின்று நாடோடி வாழ்வே வாழ்ந்து வந்தனர் என்று அறிகிறோம். இத்தகைய நாடோடி மக்களுள் ஒரு சாராரே ஆரியர் என்பவர்கள் இவர்கள் தொடக்கத்தில் எங்கிருந்து வந்தார்கள் என்று வரையறுத்துக் கூற முடியவில்லை. நடு ஆசியாவிலிருந்தனர் என்று சிலரும், தென் உருசிய நாட்டிலிருந்தனர் என்று சிலரும், பால்ட்டிக் பகுதியிலிருந்தனர் என்று சிலரும், வடமாகடற் பகு |