பக்கம் எண் :

மொழி143

     "இப்பால் வடமதுரைச் சங்கமேற்பட்டு இடமிடந்தோறும் நடைபெற்றுள்ள சுவடிகளைச் சேகரித்துப் புது நூல்களை அரங்கேற்றி வைத்தது அதன் பின் சமண வித்துவான்கள் தலையெடுத்துப் பல பல நூல்களியற்றித் தமிழை வளர்த்தனர். அதன்மேல் இதிகாச புராணாதிகள் சமக்கிருத மொழியினின்று வித்துவான்களால் மொழி பெயர்க்ப்பட்டு மறுபடியும் தமிழ் தலையெடுத்தபோது நாடு மகமதியர் கைப்பட, அவர்கள் கொறானுக்கு மாறாகவும் வீறாவதோ கிரந்தங்கள் மண்மேலென்று மத வைராக்கியங்கொண்டு, அந்தோ, நமது நூற்சாலைகளனைத்தும் ந்ீறாக அக்கினி பகவானுக்குத் தத்தஞ்செய்தனர். இவர்கள் கைக்குத் தப்பிய சின்னூல்களே நமக்குப் பெரிய அரிய நூல்களாயின. அவையும் இக்காலத்து இன்னும் நமக்கு என்ன பேரவதி வருமோவென்று பயந்தாற்போல அங்குமிங்கு மொளித்துக்கிடந்து படிப்பாரும் எழுதுவாரும் பரிபாலிப்பாருமின்றிச் செல்லுதுளைத்த புள்ளியன்றி மெய்ப்புள்ளி விரவாத செந்தாளேட்டிற்-பல் துளைத்து வண்டு மணலுழுத வரி யெழுத்து உடையவாய்ச் செல்லாலரிக்கப்பட்டும் பாணங்களாற் றுளைக்கப்பெற்றும் மூன்றாவது பாணமாகிய மண்ணின்வாய்ப் படுகின்றன."

 (கலித்தொகைப் பதிப்புரை - சி. வை. தாமோதரம் பிள்ளை.)

     "அறம் பொருள் இன்பம் வீடு பெறுமாறு சொன்ன நூல்களும் அவை சார்பாக வந்த சோதிடமும் சோகினமும், வக்கின கிரந்த மந்திரவாதமும், மருத்துவ நூலும், சாமுத்திரியமும், நிலத்து நூலும், ஆயுத நூலும் பத்துவிச்சையும், ஆடைநூலும், அணிகல நூலும், அருங்கல நூலும் முதலாயவற்றுள்ள மறைப்பொரு ளுபதேசமும்" என்னும் யாப்பருங்கலவிருத்தியால் இலக்கண இலக்கியங்களல்லாத பல தொழில்களைக் கற்பிக்கும் பலகருவி நூல்களும் இருந்தன வென்பது புலனாகின்றது. ஒரு நாவிதன் அலங்காரம் என்னும் நாவித நூல் இயற்றி அரசனிடம் பரிசு பெற்றதாகச் சிந்தாமணியிற் சொல்லப்படுகிறது. வீமனாற் செய்யப்