காலத்து மந்திரநூல்கள் பல விருந்தனவென்று விளங்கும். சமக்கிருத மொழியிற் சொல்லப்படுவன வெல்லாம் மந்திரங்களென ஒரு பிழையான விளக்கம் நம்மவர் பெரும்பாலார் உள்ளத்தில் வேரூன்றி யிருக்கின்றது. இது சமக்கிருத மொழியைச் சமய மொழியாகக் கொண்டதினால் நேர்ந்ததாகும்.
என அகத்திய முனிவர் சிவபெருமானை வேண்டிக் கொண்டதாகக் காஞ்சிப்புராணங் கூறும்.
16. தமிழ் நூல்களின் அழிவு
"தமிழுக்குக் காலாந்தரத்தில் இரண்டு பெரும் பூதங்களால் இரண்டு பேரிடையூறுகள் நிகழ்ந்தன. குமரியாறும் அதன் தெற்கேயுள்ள நாடுகளுஞ் சமுத்திரத்தின் வாய்ப்பட்டமிழ்ந்தியபோது, தமிழ்ச் சங்கத்துக்கு ஆலயமாய் சர்வகிரந்த மண்டபமா யிருந்த கபாடபுரம் அதன்கண்ணிருந்த எண்ணாயிரத் தொருநூற்று நாற்பத்தொன்பது கிரந்தங்களோடு வருணபகவானுக்கு ஆசனமாயிற்று. பாண்டிய நாட்டின் வடபாலில் ஆங்காங்குச் சிதறுண்டு குலாவிய சாதாரண சனவினோதார்த்தமான சில கிரந்தங்களும் பள்ளிக்கூடச் சிறுவர் தங் கல்வித் தேர்ச்சிக் குரியவாய் வழங்கிய சில நூல்களுஞ் சில்லறை வாகடாதிகளுமே பிற்காலத்தார் கைக்கு எட்டுவனவாயின.