பக்கம் எண் :

மொழி141

     பழைய திராவிடருக்கும் ஆரியருக்கும் இடையிலிருந்த வெறுப்பு இன்றும் குறிச்சான் என்னும் மலையாள மலைச்சாதியினர்களிடையே காணப்படுகின்றது. இவர்கள் தமிழ்நாட்டுக் குறவரை ஒத்தவர்கள். பிராமணன் ஒருவன் இவர்கள் வீட்டில் நுழைந்தால் இவர்கள் அத்தீட்டைப் போக்குவதற்கு வீட்டைச் சாணியால் மெழுகுகிறார்கள். -தமிழ் ஆராய்ச்சி - பக். 90.

4. மந்திரம்

     "நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த, மறைமொழிதானே மந்திர மென்ப" என மந்திரப் பண்பு தொல்காப்பியத்துட் கூறப்பட்டது. இதனுரை :சொல்லிய சொல்லின் பொருண்மை யாண்டுங் குறைவின்றிப் பயக்கச் சொல்லும் ஆற்றலுடையார் ஆணையாற் கிளக்கப்பட்டுப் புறத்தார்க்குப் புலனாகாமல் மறைத்துச் சொல்லுஞ் சொற்றொடர்." இளம்பூரணவடிகள் தமிழ் மந்திரத்துக்கு உதாரணம்,
"திரி திரி சுவாகா கன்று கொண்டு
கறவையும் வத்திக்க சுவாகா"
     எனக் காட்டியுள்ளார்.
"வச்சிரம் வாவி நிறைமதி மூக்குடை
நெற்றிநேர் வாங்கல் விலங்கறுத்த
லுட்சக்கர வடத்துட் புள்ளி யென்பதே
புட்கரனார் கண்ட பண்பு."
     "இது மந்திரநூலிற் புட்கரனார் கண்ட எழுத்துக்குறிவெண்பா" என்னும் யாப்பருங்கலவிருத்தியால் அக்

     1. "The hatred which existed between the early Dravidians and the Aryans is best preserved in the Kurichchans, a hill tribe in malabar, (corresponding to the Kuravas of the Tamil country) custom of plastering their huts with cowdung to remove pollution caused by the entrance of a Brahmin." - Tamil Studies. p. 90.