பக்கம் எண் :

140தமிழகம்

ஆய்தம் முதலிய முச்சார்புவகை தொகையாகச் சாரவரும் எண்ணிறந்த எல்லா எழுத்துக்களுக்கும் அகத்தெழுவளியிசை நுவல்வது. இத்தகையான பல அடிப்படையான கொள்கையினாலேயே இப்போதைய ஆரிய வேதத்தினின்றும் முற்றும் வேற்றுமைப்பட்டிருத்தல் காணலாம்."
     "ஆர்ய" என்னுஞ்சொல் தொல்காப்பிய காலத்திற்குப் பின்னும் திவாகர காலத்துக்கு முன்னும் வந்து நுழைந்திருத்தல்கூடும். அப்போது அதற்கு மிலேச்சன் என்னும் பொருள் இருந்ததும் நமக்குத் தெரியுமல்லவா? இன்னும் பிற்காலத்தில் `ஆர்யழு என்பது மிலேச்சன் என்னும் பொருளை இழந்து ஆசான் என்னும் பொருளில் வந்ததும் தெரிந்ததே. ஆதலால் ஆர்யன் ஆசானான சில நூற்றாண்டுகளிற்றான் அந்த ஆர்யர் தமிழர்க்கு நெறி கற்பிக்கக் கூடுமேயன்றி, ஆரியன் மிலேச்சனாயிருந்த காலத்தும் ஆரியன் என்பானே உண்டாயிராத தொல்காப்பியக் காலத்தும் அதன் முற்காலத்தும் முந்திய நாளையில் ஆரியன்போய், வியாசருக்குப் பிந்தி ஆர்ய வேதத்தை வைத்துக்கொண்டு பண்டைத் தமிழர்களுக்கு நெறி கற்பித்திருப்பா னென்பது ஆர்க்கியாலஜிகல் ஆராய்ச்சிக்குப் பொருந்தாது. அவையல் கிளவிகள் அடுக்கடுக்காய்க் கிடக்கும் வேத வேதாங்கங்கள், வியாகரணங்களையுடைய பிற்கால சிந்துநாட்டு ஆர்யன், முந்திய தொல்காப்பியக் காலத் தமிழனுக்கு நெறி கற்பித்திருப்பானேல் அவையல் கிளவிக்கு மறுப்பு தொல்காப்பியத்திற் றோன்றியிராது. ஆரியன் ஆசானான சில நூற்றாண்டுகளில் அவன் நெறியைக் கடைப்பிடித்துத் தமிழரும் அவையல்கிளவிகளைப் பேச்சிலும் எழுத்திலும் வழங்கிவருவது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறதன்றோ? ஆயினும் அவையல்கிளவிகளை மாத்திரம் ஆரிய மொழியில்தான் வழங்குவார்கள்."

     1. "மிலேச்சராயியர்" (பிங்கலம் திவாகரம்) "மிலைச்சரேயா ரியர்க்காம் மிலேச்சரும் விதித்த பெயரே" (சூடாமணி நிகண்டு)