பெற்றார் புரட்டியதுதான் என்னை? வியாசருக்கு முந்திய தொல்காப்பியத்தில் வியாசருக்குப் பிந்தியதும் அவரால் திருத்தப்பட்டதுமான ஆரிய வேதங்களினின்று உய்த்துப் பொருள்கோடல் ஆர்க்கியாலஜிகல் முறைக்கு ஒவ்வாது. தொல்காப்பியத்திற் சொன்ன மறை இத்தகையதென்பது தெரிவதற்கு நூலாவது சுருதியாவது இப்போதில்லை. | `அந்தணர் மறைழுயைத் தழுவியே தொல்காப்பியம் எழுதப்பட்டிருக்கிறதென்பதும், தொல்காப்பியத்துட் காணாதது அந்த அந்தணர் மறையிற் காணலாகும்படியும், அவ்வந்தணர் மறையிற் காணாதவை இத் தொல்காப்பியத்திற் காணலாகும்படியும் தொல்காப்பியம் அமைந்திருக்கிறதென்பது எனது நம்பிக்கை. | "ஆனால் அந்த அந்தணர் யாவர்? அவர் மறை யாது?" என்பனதான் புலப்படாதவற்றுட் சில. வட வேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ் உலகத்து அந்தணர் என்பாரும் சிந்து நாட்டுப் பிராமணரென்பாரும் ஒன்றேயா? தமிழ்நாட்டு அந்தணர் மறையும் சிந்து நாட்டுப் பிராமணர் வேதமும் ஒன்றேயா? நான்மறை, சதுர்வேதம், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்; பிராமண க்ஷத்திரிய வைசிய சூத்திர என்னும் போலி ஒற்றுமைகொண்டு இரண்டும் ஒன்றென்பதா? உட்கிடை வேற்றுமைகண்டு அன்றென்பதா? | "தொல்காப்பியஞ்சொன்ன தமிழகத்து அந்தணர் மறை, வியாசருக்குப் பிந்திய ஆரியவேத மன்றென்பதற்குச் சான்று தொல்காப்பிய நூலிற் பல்லிடங்களிற் காணலாம். சிற்சிலவே இம்முடங்கலில் குறிக்கவியலும். தமிழகத்தந்தணர் மறையோ தெய்வம் அஃறிணையென்பது; மந்திரங்கள் மாந்தர் கிளந்தவை யென்பது; அம்மந்திரங்களுக்கு ரிக்குகள் போன்ற அளவு முதலாகிய கடப்பாடில வென்பது; கொடி நிலை, கந்தழி, வள்ளியென்ற சிறப்பின மூன்றும் முதல வென்பது; ழ, ற, ன, எ, ஒவ்வுமன்றி | | |
|
|