பக்கம் எண் :

138தமிழகம்

     "வடக்கிருத்தல் என்னுஞ் சொற்றொடரொன்று உளது. அத்தொடரிலேனும் வடக்கென்பது திசையைக் குறிக்காது, ஊண் துறந்திருத்தலையே குறிக்கின்றது. அவ்வாறே வடசொல் லென்பதிலும் `வடழு வென்பது துறவைக் குறிக்குமேல், வடசொல் லென்பது `நூலே கரகம் முக்கோல் மணையேழு உரியனவாகக் கொண்டிருந்த தமிழ் நாட் டந்தணர்களாகிய துறவொழுக்கமே மிகுதியாகக் கொண்டவர்கள் வழங்கிய தமிழின் பகுதியாகிய சொல்லாதல் வேண்டும். ஆனால் தீர்க்கமாகச் சொல்லற் கேற்ற சான்றுகள் இதுவரையில் கிட்டவில்லை.

3. தொல்காப்பியர் கூறும் மறை

     தொல்காப்பியர் பல்லிடங்களிற் குறிப்பிட்டுள்ள மறை, தமிழ் நூலேயெனக் கருத இடமுண்டு. வியாசர் வேதங்களை நான்கு கூறுபடுத்துவதன்முன் தொல்காப்பியம் இயற்றப்பட்டதென்பது நச்சினார்க்கினியர் கூற்று. அதர்வணம் தலையாய வேதம் அன்று என்றும், பௌடிகம் தலைவராகம் சாமம் என்பன ஏனைய மூன்று வேதங்களின் பெயர்களென்றும் நச்சினார்க்கினியர் கூறியுள்ளார்.
      திருவாளர் பா. வே. மாணிக்க நாயக்கரவர்கள் மறையைக் குறித்து செய்துள்ள ஆராய்ச்சி வருமாறு:-
     "தொல்காப்பியத்துட் சொன்ன மறை ஆரிய மறையென ஒப்பினுங்கூட, உரையாசிரியர்கள் கொள்கைப்படி, வியாசர் ஆரிய வேதங்களைச் சிக்ககற்றித் தொகுப்பதற்கு நெடுங்காலத்துக்கு முன்னரே தொல்காப்பியம் இயற்றலாயின தென்றலின், வியாசருக்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் வந்த உரையாசிரியர் காலத்து வழங்கிய, இப்போது வழங்குகிற, வுட்ராப் துரையோ, மாக்ஸ்முல்லரோ பதிப்பித்த நான்கு வேதங்களல்லவென்பது உரையாசிரியர் கூற்றாலேயே வெளிப்படை. வியாசருக்கு முந்திய ஆரிய வேதமும், அவருக்குப் பிந்திய ஆரிய வேதமும் ஒன்றற்கொன்று படியாயின், வேதவியாசரென்னும் பெரும்பெயர்