போலச் சுத்த தமிழுருவாகவே திரிந்துவந்தன. அப்பால் முன் எண்ணூறு வருடம் இதிகாச காலம். பற்பல புராண காவியங்களும் கலைஞான நூல்களும் இக்காலத்தில் எழுதப் பட்டனவாயினும், தமிழிற் சிறந்த இதிகாசங்களாகிய நைடதம், பாரதம், இராமாயணம், இரகுவமிச மென்பன தோன்றிய காலமாதலின், இதிகாசகால மென்றாம். வட மொழியிலிருந்து புராண விதிகாசங்கள், சமய சாத்திரங்கள், தலமான்யங்கள், கணித சோதிடாதிகள் சுத்த சமக்கிருதா காரமாய்த் தமிழில் மொய்க்கத் தலைப்பட்டதும், வடமொழிப் பிரளயத்தைக் கண்டு தமிழ் சகிக்கலாற்றாது மூழ்கியதும் இக்காலத்திலேதான். போகர் முதலிய ஆயுத நூலாரும், பிரமர் முதலிய கணித வல்லாரும் செந்தமிழ் அணங்கின் மேனியெல்லாம் வெந்தணல் கொளுத்தி வெதுப்பிய வாறெனக்-கொடுந்தமிழ் மலிந்து கொப்புளித்தெழுந்து புண்படச் செய்த திக்காலமே...............,, பின்பு படிப்படியாகத் தமிழ்க்கல்விக்கு ஆசுபரிபாலனங் குறைந்து, சமக்கிருதம் வல்லாருக்கு மேன்மையுண்டாயிற்று. தமிழ் தனிநில்லாது தத்தளித்து வடமொழி வல்லார் கைப்பட்டு அம்மைவார்த்த உடம்புபோலத் தேகமெல்லாஞ் சமக்கிருதத் தழும்பு ஏறியது. கொப்புளித்த மேனியிற் கொடுமுள்ளு மேறியதெனத் திசைச்சொற்களும் வந்து மரீயின." (வீரசோழியப் பதிப்புரை,) | "பட்டினப்பாலையில் உள்ள வடசொற்கள் ஒன்று அல்லது இரண்டு என்றும், நெடுநல்வாடையில் 20 வரையில் என்றும், 782 அடிகளுடைய மதுரைக் காஞ்சியில் 50் க்கு அதிகமில்லை யென்றும், சங்ககாலத்தில் வடசொற்களைத் தமிழுடன் அதிகம் கலந்து செய்யுளியற்றல் புலமைக் குறைவாகக் கருதப்பட்ட தென்றும், ஒரு மொழியோடு இயைபில்லாத பிறமொழிச் சொற்களைக் கலந்து வழங்குதல் முத்துக்களுடன் மிளகுகளைக் கலந்து கோத்தல் போலாகுமென இரண்டு கன்னடப் புலவர்கள் கூறியுள்ளார்களென்று பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்." (தமிழாராய்ச்சி, பக்கம்-174) | | |
|
|